சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
வெளியான ஆண்டு: 1977
நடிகர்கள்: லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய், நாகேஷ்
இயக்கம்: ஏ.பீம் சிங்
தயாரிப்பு: ஏ.பி.எஸ்.புரொடக் ஷன்ஸ்
ஜெயகாந்தன் எழுதிய, அக்கினிப்பிரவேசம் சிறுகதை, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கங்கா எங்கே போகிறாள்? என்ற நாவலை எழுதினார். இதற்கு, சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.இது தான், ஏ.பீம் சிங் இயக்கத்தில், சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படமானது. நல்ல கதைக்கு எதுக்கு அலங்காரம் என்பதால், கறுப்பு - வெள்ளையில், இப்படம் வெளியானது.யாரோ ஒருவனால் பலாத்காரம் செய்யப்படும் கங்கா, குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறாள். வாழ்க்கையோடு போராடி, படித்து, நல்ல வேலைக்கு செல்கிறார். பல ஆண்டுகள் கழித்து, தன்னை பலாத்காரம் செய்த பிரபுவை சந்தித்திக்கிறாள்... அவர்களுக்கு இடையே நிகழும் மன போராட்டம் தான், கதைக்களம்.கங்காவாக, லட்சுமி; பிரபுவாக, ஸ்ரீகாந்த். இருவரும், தங்கள் நடிப்பின் உச்சத்தை, இப்படத்தில் காட்டியிருப்பர். லட்சுமிக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீகாந்த் எனும் சிறந்த நடிகனை, தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை, இப்படத்தின் மூலம், ரசிகர்கள் உணர்வர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. இரண்டே பாடல்கள் தான். பிண்ணனி இசை, நம்மை படத்தோடு பயணிக்க வைக்கும்.இத்திரைப்படம், தெலுங்கில், கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளியானது.நாவல்களை திரைப்படமாக்குவது என்பது, கத்தி மேல் நடப்பதற்கு சமம். அதில், ஏ.பீம் சிங் வெற்றி பெற்றார்.சில நேரங்களில் சில மனிதர்கள் படம் முடிந்து, திரையரங்கில் இருந்து வெளியேறிய ரசிகர்களிடம் நிறைந்திருந்த அமைதி, அவர்களின் மனதுக்குள் நடத்திய போராட்டத்தை உணர்த்தியது. இப்படம் பாருங்கள், நீங்களும் அதை அனுபவிப்பீர்கள்!