Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சினிமாவிற்கு புதிதாக வருபவர்களுக்கு என்ன தேவை? - நடிகர் கவுசிக்

13 மே, 2020 - 08:06 IST
எழுத்தின் அளவு:
Young-actor-Kaushik-interview

குணச்சித்ர நடிகர் பிரேமின் வாரிசு என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர் நடிகர் கவுசிக். சாட்டை 2 படம் ஓரளவுக்கு பேச வைத்தது. அவர் நம்மோடு பேசியதிலிருந்து...

உங்கள பற்றி சொல்லுங்க?

அப்பா நடிகர் பிரேம். நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள். நான், எனக்கு அடுத்து இரண்டு தம்பிகள் உள்ளோம். சினிமாவில் ஆர்வம் இருந்ததால் விஸ்காம் படித்தேன். அதில் இயக்கம் தான் என் சாய்ஸ். ரஜினி முருகன் படத்தில் இன்டன்ஷிப் வேலை பார்ததேன். ரொமோ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்ததேன். இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். சாட்டை 2 படம் பண்ணேன். இந்த காலக்கட்டத்தில் கதை எழுதி வருகிறேன்.

உங்களை பாதித்த இயக்குனர்?
நான் மணிரத்னத்தின் தீவிரமான ரசிகன். கல்லூரியில் படிக்கும் போது ஒரு படத்தை தேர்வு செய்து எழுதணும். நான் அவரின் நாயகன் படத்தை தேர்ந்தெடுத்து, அந்தப்படம் பற்றி சில விஷயங்களை சொன்னேன். சிறு வயது முதல் இப்போது வரை மணிரத்னம் பெரிய இன்ஸ்பரேஷனாக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து வெற்றிமாறன், கவுதம் மேனன் போன்றவர்களிடம் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
உங்களைக் கவர்ந்த நடிகர்கள்?
இந்த நடிகர் தான் பிடிக்கும் என்று இல்லை. எல்லா நடிகர்களின் படங்களையும் முதல் நாள் முதல் ஷோ பார்க்கிற ஆள் நான். ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பும், அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களை என்னை கவர்ந்தது. நாயகன் படம் பார்த்தால் கமலின் நடிப்பு பிடிக்கிறது. அவர் நடித்ததை பார்த்து ஒரு 50 சதவீதமாவது நாம் நல்லா நடிக்கணும் என்ற ஆசை மனதில் வருகிறது.

அப்பாவுடன் எப்போது சேர்ந்து நடிப்பீங்க?
நிறைய பேர் சும்மா பேசும்போது அப்பாவுடன் சேர்ந்?து படம் பண்ணலாம் என்று சொல்லுவாங்க. இன்னும் அந்த மாதிரி கதை கேட்கவில்லை. அப்படி ஒரு கதை வந்தால் நிச்சயம் அப்பா உடன் சேர்ந்து நடிப்பேன்.

சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு என்ன பிளஸ், சினிமா பின்னணியோடு வருபவர்களுக்கு என்ன மைனஸ்?
பிளஸ் என்று பார்த்தால் படித்து முடித்தும் உதவி இயக்குனராக வேலை பார்க்க சுலபமாக இருந்தது. மைனஸ் என்றால் சினிமாவு்கு வந்த பிறகு அப்பாவின் பெயரை எந்த வகையிலும் கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அது மிகப்பெரிய சவால்.
நடிப்பு, இயக்கம் எது ஈஸி?
உதவி இயக்குனராக வேலை பார்த்தபோது நடிப்பு ஈஸி என தோன்றியது. நடிக்கும்போது, இவ்வளவு பேருக்கு முன்னாடி நடிக்கணுமா என்ற பயத்துடன், உதவி இயக்குனராக வேலை பார்ப்பதே ஈஸி என தோன்றியது. என்னை பொறுத்தமட்டில் நடிப்பை விட படம் இயக்குவது சிரமமான விஷயம். நிறைய உழைப்பு கொடுக்கணும், சிந்திக்கணும். ஒரு படத்திற்கு இயக்குனர் தான் கேப்டன். அதனால் நிறைய பொறுப்புகள் இருக்கும். ஆகவே அது கஷ்டமான வேலை.

சாட்டையை விட சாட்டை -2 பேசப்பட்டு இருக்கலாமே?
சாட்டை படம் வந்த போது பள்ளி தொடர்பான கதையில் புதிதாக வித்தியாசமாக அமைந்தது. அதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சாட்டை 2 படத்திற்கும் நல்ல வரவேற்பு தான் கிடைத்தது. எந்த தியேட்டர் போனாலும் ரசிகர்கள் நன்றாக உள்ளது என்றனர். நான் தியேட்டர் சென்றபோது என் கேரக்டர் பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். இயல்பாக நடிக்கிறேன் என்று பாராட்டினார்கள். படம் வெளிவந்த மூன்றாவது வாரத்தில் ஒரு பெரிய தியேட்டருக்கு போனேன். அப்போது கூட அந்தக்காட்சிக்கு கூட்டம் அதிகம் இருந்தது.

சமுத்திரக்கனி உடன் வேலை பார்த்த அனுபவம்?
அவர் எப்போதுமே சிறந்த படைப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அது நடிப்பாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அது அழகாக வெளிப்படுத்தக் கூடியவர். கூட நடிக்கிற உங்களுக்கு அவ்வளவு வசதியாக இலகுவாக்கி கொடுப்பார். ஒரு சின்ன தவறு செய்தால் கூட இதை இப்படி பண்ணாம இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணலாம் என எளிமையாக பேசி நடிக்க வைக்கக் கூடியவர். இந்த மாதிரி ஒரு நடிகர், இயக்குனர் கூட நடிக்கும்போது நமக்கும் அந்த காட்சியை நல்லா பண்ணனும் என்ற உணர்வு தானாக வந்துவிடும்.

நடிக்கும் போது இயக்குனர் உணர்வு ஏற்படுமா?
அப்படி இல்லை. ஒரு இயக்குனர் சொல்லும்போது அந்த காட்சியை சுலபமாக புரிந்து கொள்கிற மாதிரி நான் எடுத்துக் கொள்வேன். கேமராவில் இந்த லென்ஸ் பயன்படுத்தினால் எவ்வளவு தூரம் வரை போக்கஸ் பண்ண முடியும் என ஓரளவுக்கு தெரியும். அந்த மாதிரி விஷயங்களை கற்றுக் கொள்வேன்.

நிறைய படித்தவர்கள் சினிமாவிற்கு வராங்க, இதுபற்றி உங்கள் கருத்து?
விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த துறைக்கு வரலாம். படித்தவர்கள் வருவது நல்ல விஷயம் தான். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் எல்லாம் வேறு துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். இப்போது அவர்கள் பெரிய படங்கள் பண்ணுகிறார்கள். வித்தியாசமான கதைக்களம் நல்ல சினிமாக்களை பார்க்க முடிகிறது. சினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முழு ஈடுபாட்டோட, நம் கனவுகள் கூட வேலை பார்த்தால் ஜெயிக்கலாம்.

புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு என்ன தேவை இருக்கணும்?
நல்ல புரொடக்ஷன் ஹவுஸ், நல்ல இயக்குனர் இப்படி எல்லா விஷயங்களும் முக்கியமானது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல கதை அமையணும். அது அமைந்தால் தான் நாம அடுத்த இடத்திற்கு நகர முடியும். ஆகவே கதை தான் ரொம்ப முக்கியம்.

கொரோனா விடுமுறையை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
உடற்பயிற்சி செய்கிறேன், நிறைய படங்கள் பார்கிறேன், கதை எழுதுகிறேன், டான்ஸ், பாக்ஸிங் பண்ணிட்டு இருப்பேன். முடிந்தவரை இந்த நாட்களை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு நான் பயன்படுத்துகிறேன் என்கிறார் வளரும் நாயகன் கவுசிக்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எதற்காக என்னை இப்படி விமர்சிக்கிறார்கள் - அஜித்தின் ரீல் மகள் கேள்விஎதற்காக என்னை இப்படி ... விரைவில் இதுவும் கடந்து போகும் : சுபிக்ஷா விரைவில் இதுவும் கடந்து போகும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13 மே, 2020 - 13:31 Report Abuse
Natarajan Ramanathan ஆணாக இருந்தால் பணம் மட்டுமே தேவை பெண்ணாகஇருந்தால் அதுவும் வேண்டாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in