டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
வெளியான ஆண்டு: 1974
நடிகர்கள்: சுஜாதா, ஜெய்கணேஷ், கமல்ஹாசன், 'படாபட்' ஜெயலட்சுமி
இயக்கம்: கே.பாலசந்தர்
தயாரிப்பு: ராம.அரங்கண்ணல்
சமூக விதிமீறல் நிகழ்ந்த, அரங்கேற்றம் படத்திற்கு பின், கே.பாலசந்தர் உருவாக்கிய படம் என்பதால், அவள் ஒரு தொடர்கதைக்கு எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் காத்திருந்தன. படம் வெளியான பின், எதிர்ப்புகள் ஏதுமின்றி, அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டது. நல்ல படத்திற்கு, நட்சத்திர பிம்பம் தேவையில்லை என்பதை, தமிழ் சினிமா உலகிற்கு உணர்த்திய படம். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும், புதுமுகங்களே! இப்படத்திற்கு பின், பலரும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர துவங்கினர்.
'கலைமகள்' இதழில், எம்.எஸ்.பெருமாள் எழுதிய, 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற கதையை பயன்படுத்தி, கே.பாலசந்தர், இப்படத்தில், 'சதுரங்கம்' ஆடியிருப்பார். ஆம், எந்த கதாபாத்திரம், எப்போது, என்ன முடிவெடுக்கும் என்பதை, ரசிகர்கள் கணிக்கவே முடியாது. குடும்பத்துக்காக, ஓடி ஓடி உழைக்கும், மூத்த பெண், கவிதாவாக, சுஜாதா வாழ்ந்திருப்பார். இரு சகோதரிகள்; அவர்களில் ஒருத்தி, விதவை. ஓடிப்போன தந்தை, உதவாக்கரை அண்ணன், கண் தெரியாத தம்பி, தாய், அண்ணி என, பிரச்னை சூழ்ந்த குடும்பத்தை, தனி ஒருத்தியாக, கவிதா இழுத்துச் செல்வாள். அவள், ஒரு தொடர்கதை!
எம்.எஸ்.,விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில், 'அடி என்னடி உலகம், கடவுள் அமைத்து வைத்த மேடை, தெய்வம் தந்த வீடு...' போன்ற பாடல்கள், காலத்தால் அழியாத புகழ் பெற்றன. இப்படம், பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது. பெண் சுதந்திரம் குறித்த படங்களுக்கு, 'கவிதா' தான் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தாள்.