பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' | தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை | ரசிகரின் வீடுதேடி சென்று சந்தித்த ரக்சிதா | ஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்க காசு: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு | ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ராம் சரண்? |
இன்றைக்கு சினிமா நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தான். இப்போதும் தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் கவனிக்கத்தக்க வகையில் உள்ளனர். அவர்களில் அனிகாவும் ஒருவர். இவரை இப்படி சொல்வதை விட, என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். அதிலும் விஸ்வாசம் படத்தில் அப்பா - மகளாக இவர்கள் நடித்த காட்சிகள் பலரையும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீரை வரவழைத்தது என்றால் மிகையல்ல. அனிகா உடன் ஒரு நேர்காணல்...
* அனிகா யார்?
நான் கேரளத்து பொண்ணு. அப்பா சுரேந்தர் கொச்சியில் வேலை பார்க்கிறார். அம்மா வீட்டில் இருக்கிறார். நான் இப்போது கேரளாவில் 10ம் வகுப்பு படிக்கிறேன்.
* உங்கள் சினிமா பற்றி சொல்லுங்க?
மலையாளத்தில் 2010ல் கதா தொடரு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தேன். தமிழில் அஜித் உடன் மட்டும் இரண்டு படங்களில் மகளாக நடித்துவிட்டேன். இதுதவிர மிருதன், நானும் ரவுடி தான் படங்களிலும் குயின் வெப்சீரிஸிலும் நடித்திருக்கிறேன்.
* அஜித் உடன் நடித்த முதல் அனுபவம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் உடன் முதன்முதலாக நடித்தேன். 20 நாட்கள் இந்தியா முழுக்க அஜித் உடன் பயணம் செய்கிற வாய்ப்பு முதல் படத்திலேயே அமைந்தது மகிழ்ச்சி.
* மொழி தெரியாமல் எப்படி நடிச்சீங்க?
கவுதம் மேனன், அஜித் இருவருமே நன்றாக மலையாளம் பேசுவார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் தான் வசனம் பேச உதவியாக இருந்தாங்க. அதனால் மொழி பிரச்னை எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் நான் தான் செட்டில் தமிழ் பேச பயப்படுவேன். எது பேசினாலும் தவறாகி விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக பேசுவேன். ஆனால் அஜித், கவுதம் மேனன் இருவரும் என்னிடம், அனிகா இந்த வசனத்தை இப்படி பேசணும், அப்படி பேசணும் சொல்லி கொடுத்தாங்க. முக்கியமாக இருவருமே கோபப்படமாட்டார்கள்.
* செட்டில் அஜித் எப்படி?
அஜித் நன்றாக சமைப்பார். படப்பிடிப்பு தளத்தில் அவர் பிரியாணி செய்து கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டோம்.
* விஸ்வாசம் அனுபவம் சொல்லுங்க?
அந்த படப்பிடிப்பு தளமே செம ஜாலியாக இருந்தது. முதல் நாளே ரொம்ப மகிழ்ச்சி. அஜித், நயன்தாரா இரண்டு பேரும் இருந்தாங்க. அவர்களுக்கு மகளாக நடித்தது மகிழ்ச்சி, அதிர்ஷடமாக எண்ணுகிறேன். தமிழில் எனக்கு முக்கியமான படங்களாக அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படம் அமைந்தது. மேலும் நயன்தாராவும் மலையாளி என்பதால் எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னோடு அவர் மிக நெருக்கமாகிவிட்டார்.
* அஜித்துடன் இரண்டாவது முறையாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கு நிறைய வித்தியாசம் இருந்தது. எப்பவும் என்னுடன் படப்பிடிப்புக்கு அம்மா தான் வருவார். அம்மாவிடம் எங்கள் குடும்பத்தை பற்றி நலம் விசாரிப்பார். படிப்பு பற்றி கேட்டறிவார். நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். செட்டுல நான் கொஞ்சம் அமைதியாக தான் இருப்பேன்.
* தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை.
விஜய், தனுஷை ரொம்ப பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா பிடிக்கும்
* உங்கள் எதிர்கால கனவு?
இப்போதைக்கு நல்ல நடிகை என எல்லா மொழி சினிமாவிலும் பெயர் வாங்கணும்.
* உங்க ரோல் மாடல் யார்?
எப்பவுமே என் அம்மா தான்.
* சமீபமாக உங்களின் கிளாமர் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் உலவுகிறதே?
நான் பத்தாவது படிக்கிறேன். இந்த வயதில் என்ன கிளாமர் இருக்கும் என மக்கள் சொல்கிறார்கள், எனக்கு புரியவில்லை. நான் சாதாரணமாகத்தான் போட்டோ ஷுட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன். ஆனால் எதற்காக என்னை இப்படி விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. பெரும்பாலும் சமூகவலைதளங்களில் வரும் கருத்துக்களை நான் படிக்க மாட்டேன்.
* வேறு படங்கள் ஏதும் நடிக்கிறீர்களா?
இப்போதைக்கு படிப்பில் மட்டும் தான் முழு கவனமும் உள்ளது. அதனால் படங்களில் நடிக்க கமிட்டாகவில்லை. பள்ளித் தேர்வு முடிந்த பின் நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்கிறார்.