Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கவர்ச்சி பொம்மையாக வலம் வர விருப்பமில்லை!

27 மார், 2020 - 06:47 IST
எழுத்தின் அளவு:
ivan-dhan-uthaman-film-debutante-Sara-Venkatesh

'பிக்பாஸ்' போட்டியாளர்களான மஹத், யாஷிகா இணைந்து நடிக்கும், இவன் தான் உத்தமன் என்ற படம் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமாகும் சாரா வெங்கடேசன் உடன் பேசியதிலிருந்து:

உங்களை பற்றியும், முதல் படம் பற்றியும் சொல்லுங்கள்?


நான் தெலுங்கு பெண். பெங்களூரில் வசிக்கிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து, சினிமாவுக்கு வரும் முதல் நபர் நான். மஹத், யாஷிகா இணைந்து நடிக்கும், இவன் தான் உத்தமன் படத்தில், இரண்டு நாயகியரில் ஒருவராக நடிக்கிறேன்.இந்த படம், தமிழ், கன்னடம் என, இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.


இந்த படம் எந்த மாதிரி கதைக்களம்?


திகில் நிறைந்த த்ரில்லிங்கான கதை. இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.


சினிமாவுக்கு வரக் காரணம்?


சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இதற்கு முன், குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சினிமாவில் நல்ல கதைக்காக காத்திருந்த போது, இந்த படத்துக்கு தேர்வு நடப்பதாக அறிந்து, நானும் அதில் பங்கேற்று தேர்வானேன்.


எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க விருப்பம்?


நல்ல கேரக்டர்களை ஏற்று நடிக்க வேண்டும். கவர்ச்சி பொம்மையாக வலம் வர விருப்பமில்லை.


தமிழில் யார் கூட நடிக்க விருப்பம்?


சின்ன ரோல் கிடைத்தாலும், விஜய் படத்தில் நடித்து விட வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை.


அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டீர்களா?


தமிழ் படம் ஒன்றிலும், கன்னட படம் ஒன்றிலும் நடிக்க உள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


தமிழ் கற்றுக் கொண்டீர்களா? இப்போது தான் ஓரளவு கற்று வருகிறேன். விரைவில் நன்றாக தமிழ் பேசுவேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - சிபிராஜ்அதிகமான படங்களில் நடிப்பதை விட ... எதற்காக என்னை இப்படி விமர்சிக்கிறார்கள் - அஜித்தின் ரீல் மகள் கேள்வி எதற்காக என்னை இப்படி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in