Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - சிபிராஜ்

13 மார், 2020 - 01:20 IST
எழுத்தின் அளவு:
I-prefer-quality-films-rather-than-more-films:-Sibiraj

வால்டர் படம் குறித்து, அந்த படத்தின் ஹீரோ சிபிராஜ் உடன் பேசியதிலிருந்து:

வால்டர் எந்த மாதிரியான படம்?
வால்டர் என்றாலே, வால்டர் வெற்றிவேல் படம் ஞாபகத்திற்கு வரும். இன்னொன்று வால்டர் தேவாரம். அவரது, இன்ஸ்பிரேஷனால் தான் படத்திற்கு, வால்டர் என, பெயர் வைத்தோம். இந்த படத்தில், கும்பகோணம் பகுதி, டி.எஸ்.பி.,யாக நடித்து உள்ளேன். கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் தொடர்பான படம் இது. இயக்குனர் அன்பு என்னிடம், இப்படத்தின் கதையை, 2015ல் கூறினார். இந்த கதை, பலருக்கு சென்று, மீண்டும் என்னிடம் வந்தது. மிகவும் விறுவிறுப்பான படம். தமிழ் சினிமாவுக்கு புதிய திரைக்கதை.

அப்பா நடித்த, வால்டர் வெற்றிவேல் படத்திற்கும், இந்த வால்டர் படத்திற்கும் தொடர்பு உள்ளதா?
வால்டர் வெற்றிவேல் படம் வெளியான போது, நான் பள்ளி மாணவன். அந்த படத்திற்கும், வால்டர் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஒரு போலீஸ் படம்; இதற்காக, கெட் அப் உள்ளிட்ட விஷயங்களில் அக்கறை செலுத்தினீர்களா?
படத்தில் நடிக்க முடிவு எடுத்த பின், ஒரு மாதம் வெவ்வேறு பணிகளில் இருந்ததால், முறுக்கு மீசை தானாகவே அமைந்தது. இயக்குனரும், சில விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தார். படத்தின் தயாரிப்பாளர், போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்தில் இருந்து வரும் போலீஸ் படம் என்பதால், எப்படி இருக்கும் என, பார்த்து கொள்ளுங்கள். தயாரிப்பாளர் தரப்பில் நிறைய சுதந்திரம் இருந்தது.

வால்டர் படத்தின் நாயகி குறித்து கூறுங்கள்?
இந்த படத்திற்கு பின், ஷெரின் காஞ்ச்வாலா, தமிழ் சினிமாவில் ஒரு, ரவுண்ட் வருவார் என, நினைக்கிறேன்.

போலீஸ் படம் என்றாலே, ஆக் ஷன் அட்டகாசமாக இருக்கும்; இப்படம் எப்படி?
அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் படத்தை தாண்டி, ஒரு ஆக் ஷன் காட்சியை தமிழ் படத்தில் தர முடியா விட்டாலும், சினிமாத்தனம் இல்லாமல், ஒரிஜினலாக சண்டைக்காட்சி எப்படி இருக்குமோ, அப்படி ஆக் ஷன் காட்சிகளை கொடுத்துஉள்ளோம்.

அப்பா உடன் நடிக்கும் ஆசை உள்ளதா?
இதற்கு முன் இருவரும் இணைந்து நிறைய படத்தில் நடித்து விட்டோம். இப்போதைக்கு இணைந்து நடிக்கும் எண்ணம் இல்லை.

வரும் காலத்தில் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?
சினிமாவில் நிறைய படங்களில் நடித்து, காணாமல் போவதை விட, தரமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டில், நான் கற்ற பாடம் இது. எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், தரமான படத்தில் பயணிக்க விரும்புகிறேன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தலைப்புக்காக மட்டும் மன்னிப்பு கேட்கிறேன் - தினேஷ்தலைப்புக்காக மட்டும் மன்னிப்பு ... கவர்ச்சி பொம்மையாக வலம் வர விருப்பமில்லை! கவர்ச்சி பொம்மையாக வலம் வர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 மார், 2020 - 00:53 Report Abuse
குமார்.. சென்னை சிபி என்ன சின்ன புள்ள தனமா pesara நீ nadikaamaa இருந்தாலே நான் kashta pattu நல்ல நடிச்சி sethu வச்ச பேரு kedamaa irukum.. Eppadi எப்படி (sathyaraj mind voice)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in