Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மனிதர்களை விட மிருகங்களை தான் பிடிக்கும்: அமலாபால்

24 ஜன, 2020 - 07:10 IST
எழுத்தின் அளவு:
Amala-Paul-love-animals-more-than-humans

ஆடை படத்திற்கு பின், தமிழில், அதோ அந்த பறவை போல படத்தை, அமலாபால் அதிகம் நம்பியுள்ளார். கதை நாயகியாக நடித்துள்ள அவருடன் பேசியதிலிருந்து:

அதோ அந்த பறவை போல படத்தை பற்றி கூறுங்கள்?


ஒரு பெண், காட்டுக்குள் தனியாக சிக்கிய நிலையில், அங்கிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை. 48 மணி நேரத்தில் நடக்கும் கதை. காட்டுக்குள் மனிதருக்கு பயப்பட வேண்டுமா அல்லது மிருகங்களுக்கு பயப்பட வேண்டுமா... யார் கொடூரமானவர்கள் என்பதை இந்த படத்தில் அறியலாம்.


இமயமலைக்கு சென்று வந்தீர்கள்; சொந்த அனுபவத்தில் உருவான படமா இது?


கடந்த, 2017ல், இந்த படம் துவக்கப்பட்டது. அப்போது தான், டிரெக்கிங் சென்று வந்தேன். இமயமலையில் தான், படப்பிடிப்பு என, முதலில் கூறினர். அதன்பின், காட்டை தேடி பிடித்து, என்னை நடிக்க வைத்து விட்டனர்.


காட்டில் எந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டன?


எனக்கு நாட்டை விட, காடு தான் பிடிக்கும். உண்மையாகவே மனிதர்களை விட, மிருகங்களை தான் பிடிக்கும். காட்டில் படப்பிடிப்பு நடந்த போது நிறைய சிரமங்கள் இருந்தாலும், நல்ல அனுபவமாகவே இருந்தது. போன் சிக்னல் கூட கிடைக்காமல் இருந்தாலும், நிம்மதியாக படப்பிடிப்பை நடத்தினோம். அதே சென்னையில் இருந்திருந்தால், சிரமம் தான்! படப்பிடிப்பின் போது, 100 குரங்குகள் எங்களுக்கு முன், பாதுகாப்புக்கு நிற்பது போல் நின்றன.


பழங்குடி மக்கள் இதில் உள்ளனரா...


இந்த கதையில் பழங்குடி மக்கள் உள்ளனர். கற்பனை பழங்குடி மக்களை உருவாக்கி, அவர்கள் புது மொழி ஒன்றை பேசுவது போல் சித்தரித்து உள்ளோம். அது அனைவருக்கும் புரியும். பாகுபலியில் கூட, ஒரு புது மொழியை பார்த்திருக்கலாம்.


ஆக் ஷன் காட்சியில் அசத்தியுள்ளீர்களாமே...


மூன்று சண்டைக்காட்சிகள் உள்ளன. சண்டைப்பயிற்சி கலைஞர் சுப்ரீம் சுந்தருடன் ஒரு அட்டகாசமான சண்டை இருக்கிறது. இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றேன். எல்லா மனிதர்களுக்குள்ளும் சிவசக்தி இருக்கும். இந்தப் படத்தில், அதை நான் உணர்ந்தேன்.


வெப்சீரிஸில் நடிக்கிறீர்களா?


படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாலிவுட்டில் உருவாக்கிய, லவ் ஸ்டோரி கதை, தமிழில் சற்று மாற்றப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.


பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்டீர்களாமே?


அப்படத்திற்காக ஒத்திகை நடந்தது. அந்த பாத்திரத்திற்கு நான், செட் ஆகவில்லை. மணிரத்னம் சார், கண்டிப்பாக வேறு ஒரு படத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு தருகிறேன் என்றார். 90 சதவீதம், பொருந்தினால் தான் வெற்றி பெற முடியும். நமக்கு எல்லாமே வேண்டும் என, நினைக்க முடியாதே


!ஆடை படத்திற்கு இதுவரை விருது கிடைக்காதது குறித்து கவலைப்பட்டதுண்டா?


அந்தப் படத்தில் விருதை எதிர்பார்த்து நடிக்கவில்லை. என்னை நிரூபிக்க நினைத்தேன். அதை வெற்றிகரமாக செய்து விட்டேன். என் நடிப்பை பார்த்து, தேசிய விருது கிடைக்கும் என பலர் கருதியதே, தேசிய விருது கிடைத்ததற்கு சமம்.


அடுத்து நடிக்கும் படங்கள்?


முதன் முதலாக, பாலிவுட் படத்தில் நடிக்கிறேன். என் கனவு படம் அது. மகேஷ்பட் தயாரிக்கிறார். மற்ற விபரங்கள் விரைவில் தெரியவரும்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மொழிகளால் கலையை பிரிக்க முடியாது: மெஹ்ரின்மொழிகளால் கலையை பிரிக்க முடியாது: ... கமலுக்கா, ரஜினிக்கா? - யாருக்கு ஆதரவு... 'சஸ்பென்ஸ்' வைக்கிறார் ராதிகா கமலுக்கா, ரஜினிக்கா? - யாருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

25 ஜன, 2020 - 06:53 Report Abuse
chandran கரடி குட்டிதான் பொறக்கும் பரவாலியா
Rate this:
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
24 ஜன, 2020 - 11:14 Report Abuse
Shanan ஆமா இவரைப் போல ஆடை இல்லாமல் இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in