Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மொழிகளால் கலையை பிரிக்க முடியாது: மெஹ்ரின்

17 ஜன, 2020 - 07:14 IST
எழுத்தின் அளவு:
Can-not-divide-Languages-says-Mehrin

தெலுங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்த மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் மீண்டும், பட்டாஸ் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இதற்கு முன் இவர் நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. பட்டாஸ் படம் மூலம், மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்தது குறித்து அவருடன் பேசியதிலிருந்து:

பட்டாஸ் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

தமிழில் எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. எனக்கு ஏற்ற பாத்திரம். கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. நீண்ட நாள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த பட வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம்.

பட்டாஸ் படத்தில் நடித்த அனுபவம்?

தனுஷ், சிநேகா ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நல்ல உழைப்பாளி. சினிமாவை அதிகமாக நேசிக்கிறார். இயக்குனர் துரை செந்தில்குமார், தயாரிப்பாளர் தியாகராஜன் என, படக்குழு அனைவருடனும் பயணித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

இந்த படம், அடிமுறை என்ற தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீங்களும் இந்த கலையை முறைப்படி கற்றீர்களா?
சிநேகா அடிமுறை பயின்றார். எனக்கு அந்தமாதிரி காட்சிகள் இல்லாததால், அதை கற்கவில்லை. படத்தில் அடிமுறை குறித்து, நல்ல கருத்து இடம் பெற்று உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அதை நான் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை.

தமிழில் பேசத் தெரியுமா?
இப்போது தான் கொஞ்சம் கற்று வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.உங்களுக்கு பிடித்த நடிகை?நிறைய பேர் இருக்கிறார்கள். நயன்தாராவை மிகவும் பிடிக்கும்.

தமிழில் அடுத்து நடிக்க உள்ள படங்கள்?
பட்டாஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடிவு செய்து உள்ளேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் அவசரப்பட விரும்பவில்லை.

தமிழ், தெலுங்கு தவிர மற்ற மொழி படங்களில் நடித்துள்ளீர்களா?
தெலுங்கில் அதிகமாக, 16 படங்கள் நடித்துள்ளேன். பஞ்சாபி, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளேன்.

தமிழில் நடிப்பதற்கும், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
எல்லாமே நடிப்பு தான். மொழி மட்டுமே வித்தியாசம். மொழியால் கலையை பிரிக்க முடியாது.

நடிப்பு தவிர மற்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?
இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறேன். நல்ல நடிகை என பெயர் எடுக்க வேண்டும். மற்ற எதிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை.

தமிழ் ரசிகர்கள் குறித்த உங்கள் கருத்து?
தமிழ் ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. நிறைய தமிழ் படங்களில் நடித்து, அவர்களின் அன்புக்கு பாத்திரமாக இருக்க ஆசை.

பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடினீர்கள்?
தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும், தியேட்டரில் பட்டாஸ் படம் பார்த்தேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி... செல்லம்மான அப்பா...! - 'ஸ்டார்' நடிகை நிவேதாரஜினி... செல்லம்மான அப்பா...! - ... மனிதர்களை விட மிருகங்களை  தான் பிடிக்கும்: அமலாபால் மனிதர்களை விட மிருகங்களை தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in