Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

இழப்பை சந்திக்க தைரியம் வேணும்!

30 ஆக, 2019 - 06:57 IST
எழுத்தின் அளவு:
இழப்பை-சந்திக்க-தைரியம்-வேணும்

வெளுத்து கட்டு படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, அட்டகத்தி, ஸ்கெட்ச், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த, விஸ்வந்த், தற்போது சசிகுமார், தனுஷ் ஆகியோருடன் நடிக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...


சினிமாவுக்கு வந்தது எப்படி?


பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும் நெல்லை டவுன் தான். சினிமா மீதுள்ள ஆர்வத்தால், ஸ்ரீதர் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அதன் பின், நடிப்பில் ஆர்வம் ஏற்பட, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, வெளுத்து கட்டு படத்தில் நடித்தேன்.


சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகியும், குறைவான படத்திலேயே நடித்தது ஏன்?


எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. நாயகனாக நடிப்பதை விட, கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். நடித்தது, 10 படம் தான். ஆனால், வந்த வாய்ப்புகள், 40க்கும் மேல். இதில் நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளேன்.


நடித்து வரும் படங்கள்?


சசிகுமாருடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். ஜோடியாக அனன்யா நடிக்கிறார். தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


இந்தியன் - 2 பட வாய்ப்பை மறுத்து விட்டீர்களாமே?


நான் சினிமாவில் இருக்கிறேன். முதல் படியை கடந்துள்ளேன் என்பதை, ஷங்கர் சார் அழைத்து, என்னுடன் பேசிய போது தான் உணர்ந்தேன். இந்தியன் - 2 படத்தில், நல்ல பாத்திரம் எனக்கு அமைந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்னையால் தேதி தரமுடியவில்லை. அப்பட வாய்ப்பை இழந்தது, சினிமாவில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம்.


மறக்க முடியாத சம்பவங்கள்?


வெளுத்து கட்டு படத்தின் முதல் காட்சியில், என் கையை வெட்டுவது போல் காட்சி. அழுது கொண்டே வசனம் பேச வேண்டும். எப்படி நடிக்க வேண்டும் என, இயக்குனர் ஒரு முறை நடித்து காண்பித்தார். அதன் பின் ஒத்திகை எதுவும் இல்லாமல், நேரடியாக நடித்தேன். முதல், 'டேக்கே' ஓகே ஆனது. கையில் காயமும் பட்டது. தட்டிக் கொடுத்த இயக்குனர், 1,000 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்துக்கச் சொன்னார். ஆனால், அந்த ரூபாயை, இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.


எதை நோக்கி உங்கள் பயணம்?


நான் எப்போதும் முதலிடத்தை நோக்கி ஓட மாட்டேன். எனக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. எனக்கு நானே போட்டியாளர். இப்போதைக்கு நடிப்பு மட்டுமே. அதில், வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஒரேமாதிரி யான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.


சினிமாவில் ஜெயிக்க என்ன வேண்டும்?


இழப்புகளை சந்திக்க தைரியம் வேண்டும். பொறுமை மிகவும் அவசியம். வந்தோம், போனோம் என, இருக்கக் கூடாது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை - அபிராமிநேர்கொண்ட பார்வை - அபிராமி அஜித் ஏன் மாஸ் ஹீரோவா இருக்கார்? - பிரியதர்ஷினி அஜித் ஏன் மாஸ் ஹீரோவா இருக்கார்? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in