Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அன்புள்ள அம்மாவும்... அழகிய த்ரிஷாவும்...!

13 மே, 2019 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Mothers-day-Special-:-Trisha-interview

"என்ன இவங்க த்ரிஷா அம்மாவா, பார்க்க அக்கா மாதிரி இருக்காங்கா..." என ஆரம்பத்தில் த்ரிஷாவின் அம்மாவை பார்த்தவர்கள் இப்படி தான் ஆச்சர்யப்பட்டார்கள். இன்றும் அந்த ஆச்சர்யம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இளமை துள்ளும் அழகான த்ரிஷாவும், அன்புள்ள அம்மா உமா கிருஷ்ணனும் அன்னையர் தினத்திற்காக மனம் திறந்தார்கள். த்ரிஷா பதிலளிக்கிறார்...

படிப்பு எல்லாம் எங்க?
எல்கேஜியிலிருந்து பிளஸ் 2 வரைக்கும் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க்கில் தான் நான் படிச்சேன். எனக்கு கணிதம், ஆங்கிலம் படிக்க மிக பிடிக்கும் நிறைய மதிப்பெண்கள் அதில் தான் வாங்குவேன்.

மாடலிங் ஆர்வம் எப்படி?
மாடலிங் பண்ண வேண்டும் என நான் தான் அம்மாவிடம் சொன்னேன். அப்போது அவருக்கு எதுவும் தெரியாது. பிறகு விளம்பரத் துறையில் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கி தொடர்பு கொண்டு என்னை தயார்ப்படுத்தினார். என்னுடைய புகைப்படத்தை என் அம்மாவிடம் கேட்டார்கள் ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் முறைப்படி எந்த புகைப்படம் எடுக்க வில்லை அதனால் விடுமுறையில் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படித்தான் மாடலிங் துறையில் நான் காலடி எடுத்து வைத்தேன்.

முதல் விளம்பர அனுபவம்?
எனக்கு நன்கு நினைவிருக்கிறது. என் தாயாருக்கு ஒரு போன் வந்தது. ஏவிஎம் ஸ்டுடியோவில் மெடிமிக்ஸ் விளம்பரம் தொடர்பான மாடலிங்கிற்கு ஆள் தேர்வு செய்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. நான் என் அம்மாவை அழைத்துக் கொண்டு சிலரிடம் விசாரித்துக் அங்கு சென்றேன். கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொண்டனர். அங்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தார்கள், பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம். அம்மாவிற்கு நம்பிக்கையே இல்லை. ஐந்து நாட்கள் கழித்து நான் தேர்வு செய்யப்பட்ட விபரம் கிடைத்தது. அம்மாவால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் பல அனுபவம் வாய்ந்த மாடலிங் பெண்கள் அந்த தேர்வில் கலந்து கொண்டனர். அந்த சோப்பு விளம்பரம் பல மொழிகளில் தேசிய அளவில் விளம்பரம் ஆனது. அதை பார்த்துவிட்டு பல விளம்பரத் துறையில் இருப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.. கிட்டத்தட்ட அந்த வருடம் மட்டும் சோப்பு, க்ரீம் என்று பல்வேறு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

மிஸ் சென்னை அனுபவம்?
சோபா வித்யா என்பவர் மாடலிங் கோ-ஆர்டினேட்டர். அவர் தான் என்னை சேலத்திற்கு அழைத்து போனார். அவர் சொல்லி தான் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு 16 வயது தான். அங்கு போட்டியில் வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என கேள்வி கேட்டாங்க. நேர்மையாக இப்பது தான் முக்கியம், ஆனால் அப்படி இருப்பது மிக கஷ்டம் என்று சொன்னேன். இந்த பதில் அந்த போட்டி நடுவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. உடனே என்னை மிஸ் சென்னை என்று அறிவித்தார்கள். அம்மா கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது. அப்படி தான் மிஸ் சென்னை பட்டம் கிடைத்தது.

பட அழைப்பு எப்படி வந்தது?
மிஸ் சென்னை பட்டம் வாங்கிய உடனே எங்க வீட்டுக்கு மூணு தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனால் அம்மா இப்போது சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்தார். படிப்பு முடியட்டும் என்றார். அப்போது, எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். அதன்பிறகு எம்பிஏ படிக்க ஆஸ்திரேலியா அல்லது லண்டன் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் படிக்கும்போதே இயக்குனர் பிரியதர்ஷன் லேசா லேசா படத்தின் மூலமாக என்னை அறிமுகப்படுத்தினார். தோழிகள் எல்லாரும் வெளிநாட்டுக்கு படிக்க போயிட்டாங்க நான் சென்னையிலேயே நடிக்க வந்துட்டேன்.

படிப்பா, நடிப்பா என்று எப்ப முடிவெடுத்தீர்கள்?
சினிமா ரொம்ப ரிஸ்க் ஆனது என அப்பாவும், அம்மாவும் ஆரம்பத்தில் பயந்தனர். இரண்டாண்டு டைம் கேட்டேன். சரியா வந்தது என்றால் சினிமாவில் இருக்கேன், இல்லையென்றால் படிக்க வந்துவிடுவேன் என அம்மாவிடம் சத்தியம் செய்தேன். அதன்படி, லேசா லேசா, மவுனம் பேசியதே படங்கள் ஓரளவு என்னை தூக்கி நிறுத்தியது..

அம்மா சமையலில் ரொம்ப விருப்பமான உணவு.?
அம்மா கையால சமைக்கும் மோர்க்குழம்பு, ரசம், உருளைக்கிழங்கு வருவல் ரொம்ப பிடிக்கும். வெளிநாடுகள் போகும்போது அந்த நாட்டில் எந்த உணவு புகழ் பெற்றதோ அதைத்தான் விரும்பி சாப்பிடுவேன். சனி, ஞாயிறுகளில்மட்டும் ரொம்ப அதிகமா சாப்பிடுவேன் மற்ற நாட்களில் சாப்பாடு ரொம்பவே குறைந்துவிடும்.

ஆரம்பத்தில் படப்பிடிப்பிற்கு அம்மா கூடவே வந்தாங்களே?
முதல் இரண்டு வருடங்கள் எல்லா இடத்திற்கும் என் அம்மா தான் கூடவே வருவாங்க. பிறகு எனக்கு என்று தன்னம்பிக்கை வந்தது. சில பேரை உதவியாளர்களாக நியமித்தும் அதனால் வந்து போவதை போவதை குறைத்து கொண்டார்கள்.

ரொம்ப கஷ்டப்பட்டு உடல் உழைப்பு அதிகமாக கொடுத்த படங்கள் எந்த படங்கள்.?
வருஷம், கில்லி, ஆயுத எழுத்து இந்த மூன்று படங்களுமே தண்ணீரில் அதிகமாக என் நடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள்.. ரொம்பவே உடல்ரீதியாக சிரமப்பட்டேன். மூன்றும் ஒரே சமயங்களில் எடுக்கப்பட்டதால் நான் சிரமப்படுகிறேன் என்று என் தாய்க்கு மிகவும் வருத்தம். சில சமயங்களில் கண்ணீரும் விட்டார். நான் அவ்வளவு ஈசியாக இந்த இடத்தைப் பிடிக்கவில்லை, பல சிரமங்களை பட்டு தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்.

அப்பாவின் மறைவு, திருமணம் நின்றது இந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தீர்கள்?
என் குடும்பத்தைப் பொருத்தவரையில் என் பாட்டி, என் அம்மா இப்படி எல்லோருமே தைரியமானவர்கள். அதனால் நான் வீட்டில் உட்கார்ந்து அழுது புலம்பி வீட்டிலேயே முடங்கி போறவள் கிடையாது. சோகமும் வருத்தமும் எனக்கு இரண்டு நாட்கள் தான். அதன் பிறகு அடுத்த வேலையில் என் கவனம் போய்விடும். அப்பா மறைவிற்குப் பிறகு எங்கள் குடும்பம் தனியாக நின்றது போல் ஒரு வருத்தம் இருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு எங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்த வேண்டிய சூழலில் இருந்தோம்

இப்போது உங்கள் மனநிலை?
ரொம்ப தெளிவான மனநிலையில் இருக்கிறேன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை நிதானமாக எந்த ஒரு விஷயத்தையும் கையாளுகிற அளவு பக்குவம் வந்து விட்டது என்று சொல்லலாம். வந்த புதிதில் பெரிய நடிகர்களின் படங்களில் சில காட்சிகள் வந்தால் போதும் என்று கூட ஒத்துக்கொண்ட காலங்கள் உண்டு. ஆனால் இப்போது எனக்குப்பிடித்த கதை. எனக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தால் மட்டுமே ஒத்துக்கொள்கிறேன். உதாரணத்திற்கு 96 படம்.

உங்கள் திருமணம் பற்றி?
எனக்கு கல்யாணம் பண்ணிக்காம இப்படியே தான் இருக்கணும் அப்படின்னு ஆசைப்படல அப்படி முடிவு எடுக்கல. எனக்கு என் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒருத்தர் இருக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாரும் சொல்றதுக்காக நான் பண்ணிக்க முடியாது. என் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு ஆள் எனக்கு தெரிந்தால் கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்கிறேன்.

வெளியூர் படப்பிடிப்புகளுக்கு போகும்போது அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா.?
இப்போ தொழில்நுட்பம் ரொம்பவே வளர்ந்து இருக்கு. போன்ல பேசுறது ரொம்ப ஈஸி. நான் எந்த ஊரில் செட்டில் இருந்தாலும் என்ன சாப்பாடு சாப்பிடறேன், என்ன சீனு எடுத்தாங்க, என்ன படப்பிடிப்பு, யார் ஹீரோ, என்ன நடந்தது, எல்லாமே எங்க அம்மா கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். என் அம்மாவை மிஸ் பண்ற மாதிரி எனக்கு தோணவே இல்ல.

த்ரிஷா அம்மா நீங்க சொல்லுங்க உங்களுடைய மகளுடைய வளர்ச்சி எப்படி பார்க்கிறீர்கள்.?
ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்ல குடும்பத்தில் யாருமே சினிமாவில் கிடையாது. த்ரிஷா மட்டும் தான் ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த நிறைய சாதிச்சா. அதே அளவுக்கு இப்ப அவளுக்கு என் உதவி ரொம்ப அதிகமா தேவைப்படுவதில்லை. என்ன அவளை ஒரு சீனியர் நடிகை மாதிரி உணருகிறாள். கதை தேர்விலும் சரி, படங்களை தேர்வு செய்வதிலும் சரி, ரொம்ப திறமைசாலி ஆயிட்டா. ரொம்ப தேர்வு செய்து நடிக்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. த்ரிஷா என்னை அம்மாவை பாக்காம, ஒரு தோழியா பார்க்கிறாள். நான் என்னோட மகளா பார்க்காமல் தோழியா தான் அவளைப் பார்க்கிறேன். சில சமயங்கள் ரெண்டு பேரும் சண்டை போடுவோம். விவாதங்கள் நடக்கும், ஆனால் அதன்பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து கொள்வோம். ரொம்பவும் சுதந்திரம் கொடுக்க மாட்டேன். கேள்வி கேட்கும் நேரத்தில் கேள்வி கேட்க தவறவும் மாட்டேன்.. சமீபத்தில் அவள் பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடினோம். நானும் அவளுக்கு நிறைய பரிசுகள் வாங்கிக் கொடுத்தேன். அவளும் எனக்கு நிறைய வாங்கிக் கொடுத்தாள். த்ரிஷாவுக்கு நான் ஒரு அம்மாவா, தோழியா, சகோதரியா, அவளுடைய கால்ஷீட் பார்க்கிற மேனேஜராக இப்படி எல்லா வகையிலும் நான் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவனை மிஸ் பண்றேன் : சோனியா அகர்வால்செல்வராகவனை மிஸ் பண்றேன் : சோனியா ... சின்ன பட்ஜெட் படங்களையும் கவனியுங்கள்: வெற்றி சின்ன பட்ஜெட் படங்களையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in