Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்! வசந்த் ரவி

19 ஏப், 2019 - 07:11 IST
எழுத்தின் அளவு:
நிழலை-நிஜத்தில்-பின்-தொடர-வேண்டாம்!-வசந்த்-ரவி

தரமணி படத்தில் நடித்த, வசந்த் ரவி, தற்போது ராக்கி படத்தில், வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:


தரமணி படத்திற்கு பின் நிறைய இடைவேளை ஏன்?


தரமணிக்கு பின், நிறைய கதைகள் வந்தன. அந்த படத்திற்கு, உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், நம் அடுத்த படைப்பு, தரமணி படத்தை விட சிறப்பானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன்; அப்படி கிடைத்த கதை தான், ராக்கி.


ராக்கி படத்தில் இணைந்தது குறித்து?


இந்த படத்தில், வேறொரு பெரிய நடிகர் நடிக்க வேண்டியது. ஏதோ ஒரு காரணத்தால் படம் துவங்கவில்லை. ராக்கி படத்தின் தாமதத்தால், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் எனக்கு ஒரு காதல் கதையை சொல்ல வந்தார். ஆனால், எனக்கு ராக்கி கதையை கேள்விபட்டு, அதன் மேல் ஆர்வம் வந்தது.


ராக்கி படத்தின் கதை என்ன?


இப்படத்தில் நாயகி கிடையாது. ஆக் ஷன், த்ரில்லர் நிறைந்த படம். இப்போதைக்கு இவ்வளவு தான் கூற முடியும்.


தமிழ் சினிமா முன்னேறி இருப்பதாக நினைக்கிறீர்களா?


கண்டிப்பாக முன்னேறி இருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக, தமிழ் சினிமா அதிவேகமாக முன்னேறி இருக்கிறது. நிறைய வித்தியாசமான கதைகள் வந்து, வெற்றி பெற்றுள்ளன. இது தொடர வேண்டும். இது, தமிழ் சினிமாவுக்கும் நல்லது.


நடிகர், தயாரிப்பாளராக இருக்கக்கூடாது என்கின்றனரே?


நினைத்த மாதிரி படத்தை எடுக்க முடிந்தாலும், தயாரிப்பு பணி கடுமையானது. என்னைப் பொறுத்தவரை தயாரிப்பாளராக இருப்பது மிகவும் சிரமம்.


முதல் படத்திலேயே, 'போஸ்டர், பேனர், கட்- - அவுட்' எல்லாம் வைத்தீர்களா?


அய்யோ... அந்த மாதிரி எல்லாம் கிடையவே கிடையாது. இது குறித்து, இயக்குனர் ராம் கூட என்னிடம் கேட்டார். அதன் பின், யார் பேனர் வைத்தனர் என விசாரித்தேன். என் நலம் விரும்பிகள், எனக்கு தெரியாமல் செய்த வேலை அது.


ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


நான் நடித்து ஒரு படம் தான் வந்துள்ளது. கதைக்காக, நான் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். முடியாது என சொல்ல முடியாது. அது, நிழல். கதையில் என்னைப் பார்க்கும் ரசிகர்கள், நிஜத்தில் பின் தொடர வேண்டாம். தவறான கருத்துள்ள படங்களில் நிச்சயமாக நடிக்க வேண்டாம்.


ஆண்ட்ரியாவிடம் தொடர்பில் உள்ளீர்களா?


ஆம். என் நல்ல தோழி. நான் நடிக்கும் படம் குறித்து அவ்வப்போது கேட்பார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொழில்நுட்பத்தை கத்தி போல் பயன்படுத்தணும் : ஜீவாதொழில்நுட்பத்தை கத்தி போல் ... என் ஓட்டு செல்லுமா, செல்லாதா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யணும்! என் ஓட்டு செல்லுமா, செல்லாதா என்பதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in