Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

தொழில்நுட்பத்தை கத்தி போல் பயன்படுத்தணும் : ஜீவா

04 ஏப், 2019 - 23:52 IST
எழுத்தின் அளவு:
Use-technology-as-a-knife

ஜீவா நடித்த, கீ, ஜிப்ஸி, கொரில்லா, சீர் உள்ளிட்ட படங்கள், அடுத்தடுத்து வெளியாக உள்ளன. பிசியான படப்பிடிப்புகளுக்கு இடையில், ஜீவா உடன் பேசியதிலிருந்து:


கீ என்றால் என்ன?



கீ என்பது தமிழ் சொல். தொல்காப்பியத்தில், கீ என்றால், எவ்வளவு நன்மைகள் உண்டோ, அந்தளவு தீமையும் உண்டு என அர்த்தம் சொல்லியுள்ளனர்.


நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், கல்லுாரி மாணவராக நடிக்கிறீர்களே?


ஐந்தாண்டுகளுக்கு முன், நண்பன் படத்தில், கல்லுாரி மாணவராக நடித்தது சுலபமாக இருந்தது. தற்போது தொழில்நுட்பம் அதிகம் வந்த பின், கல்லுாரி மாணவராக நடிப்பது கடினமாகிவிட்டது. இப்போதுள்ள மாணவர்களுக்கு அனைத்தும் தெரிந்துள்ளது.


உங்கள் சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டுள்ளதா?


டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தை சிலர் முடக்கியுள்ளனர். பல மாதங்களாக பயன் படுத்தாமல் விட்டதால், அவ்வாறு நடந்துள்ளது.


ஹேக்கர்களிடமிருந்து தப்ப வழியில்லையா?



பாஸ்வேர்டை, புரியாத வார்த்தையில் வைக்க வேண்டியது தான். ஆனால், எப்படி போட்டாலும், பாஸ்வேர்டை கண்டுபிடித்து விடுவர். கால்சென்டரிலிருந்து பேசிக் கொண்டிருக்கும் போதே, நம் கணக்கை திருடி விடுகின்றனர். இந்தமாதிரி நிறைய தொழில்நுட்பம் வந்து விட்டது.


மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என்கிறீர்களா?



கத்தியை எப்படி பத்திரமாக பயன்படுத்துகிறோமோ, அப்படித் தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில், மொபைல் போனால், பல பயங்கர சம்பவங்கள் நடந்து விட்டன. நம் நாட்டுக்கு, இப்போது தான் வரத் துவங்கியுள்ளது.


இரும்புத்திரை படமும், கீ படமும் ஒன்றா?


இரண்டும் வெவ்வேறு படம். கீ படத்தை துவக்கி, பாதி படப்பிடிப்பு செல்லும்போது தான், இரும்புத்திரை படத்தை துவக்கினர். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போது, அதேமாதிரி கதையை, யாரும் எடுக்க மாட்டார்கள். இந்த படத்தின் கதையை, துவக்கத்தில், பலரிடம் எடுத்து சென்றார் இயக்குனர். கதையை கேட்டவர்கள், இப்படியெல்லாம் நடக்குமா என்றனர். ஆனால், இப்போது நிஜத்திலேயே நடந்து கொண்டிருக்கிறது.


படம் தயாரித்து வெளிவருவதில், சிரமம் உள்ளதாக நினைக்கிறீர்களா?



நடிகராக ஒரு படத்தை முடிக்க, மூன்று மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது. மற்ற துணை நடிகர்கள், தேதியை பிரித்து தான், தருகின்றனர். படத்தின் நாயகனாக இருப்பதை விட, துணைபாத்திரமாக நடித்து விட்டு போவது, சுலபமாகத் தான் இருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானால், அந்தப் படத்தை முடித்து விட்டுத் தான், அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும்; அது தான் என் விருப்பம். அனைவரும் திட்டமிட்டு படத்தை முடித்தால் நல்லது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லவ் இல்லாதவங்க யாரு : சிலிர்க்கும் சாய் பிரியங்கா ருத்லவ் இல்லாதவங்க யாரு : சிலிர்க்கும் ... நிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்! வசந்த் ரவி நிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in