Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தா

21 மார், 2019 - 23:47 IST
எழுத்தின் அளவு:
Samantha-talk-about-Pollachi-incident

திருமணத்துக்கு பின்னும், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில், தொடர்ச்சியாக நடித்து வருகிறார், சமந்தா. தற்போது, சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்து, அவரிடம் பேசியதிலிருந்து:

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தது குறித்து?


படம் குறித்து எதுவும் சொல்லக்கூடாது என, இயக்குனர் முன்பே சொல்லிவிட்டார். முதலில், இரண்டு பெரிய நடிகையரிடம் தான், இயக்குனர் சென்றார். அவர்கள் முடியாது என கூறியதால் தான், எனக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


படத்தில் நடித்த அனுபவம்?


படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் சவாலாகவே இருந்தது. நடுத்தர குடும்பத்தில் புதிதாக திருமணமான பெண் தான் வேம்பு. இது ஒரு ஆச்சரியமான கேரக்டர். டப்பிங்கிலும் நானே பேசியுள்ளேன்.


படம் வெளியானதும் யாருக்கு விருது கிடைக்கும்?


கண்டிப்பாக இயக்குனருக்கு தான் கிடைக்கும். மற்ற யாருக்கும் கிடைக்காது. ஆரண்யகாண்டம் படத்தை முடித்து, எட்டு ஆண்டுகள் கழித்து, சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.


படப்பிடிப்பின் போது, நிறைய, டேக் வாங்கினீர்களா?


நான் தான் படத்தில் குறைந்த, டேக் வாங்கினேன். இதற்காக கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். நிறைய டேக் வாங்கியிருந்தால், நான் அவ்வளவு தான்.


விஜய் சேதுபதி, பகத் பாசில் உடன் நடித்த அனுபவம்?


பகத் பாசிலுடன் நடிக்கும் போது, எதுவும் தெரியாது. ஆனால், படத்தில் பார்க்கும்போது, இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என, யோசிக்க தோன்றும். விஜய் சேதுபதி உடன் நடித்தது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது.


கேப்டன் மார்வெல் போன்று சூப்பர் பெண்மணி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால்...


அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக நடிப்பேன். ரொம்ப சந்தோஷமாக, அனுபவித்து நடிப்பேன்.


உங்கள் கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும் நடிப்பது குறித்து?


கணவன், -- மனைவியாகவே நடிக்கிறோம். மீண்டும் காதல், டூயட் எல்லாம் பாடினால் நன்றாக இருக்காது. கதைக்காகவே இணைந்து நடிக்கிறோம்.


96 தெலுங்கு ரீமேக்கில் கதை மாற்றப்பட்டதா?


இது நீங்கள் பரப்பிய வதந்தி. அப்படி எதுவும் இல்லை.


அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதாவது?


இதெல்லாம் எதற்கு இப்போது... நீங்கள் விருப்பப்பட்டால், வந்து விட்டால் போகிறது. நாளைக்கே இது குறித்து பேச்சு நடத்தி, கட்சி துவக்கி விடலாம்.


பொள்ளாச்சி சம்பவம் குறித்து உங்கள் குரல் ஒலிக்கவில்லையே?


அந்த மாதிரி சம்பவங்களை மேற்கோள்காட்டி, அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. இதற்கு முன் பல விஷயங்களை பேசியுள்ளேன். நான் பேசுவதால், சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், பல லட்சம் பேருக்கு தெரியும் என்பதை உணர்ந்தேன். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும். அதனால், பாசிடிவ் விஷயங்கள் குறித்து மட்டுமே பேசுகிறேன்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் : ராய் லட்சுமிகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... பிடித்தால், 'லைக்' பண்ணு; பிடிக்கலேன்னா, 'பிளாக்' பண்ணு! பிடித்தால், 'லைக்' பண்ணு; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
22 மார், 2019 - 18:59 Report Abuse
Sanny பொள்ளாச்சி சம்பவத்துடன் தமிழ்நாடு பெண்கள் திருந்தனும், ஒருபாடமாக இருக்கணும். கண்ட, கண்ட போனில்வரும் மிஸ் Call களுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே நல்லது.
Rate this:
mohan - chennai,இந்தியா
22 மார், 2019 - 16:25 Report Abuse
mohan கெட்டவன் படத்தில் வரும் கடைசி காட்சி போல் எல்லா பெண்களும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
sam -  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2019 - 15:41 Report Abuse
sam sam kutty
Rate this:
vj -  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2019 - 15:31 Report Abuse
vj தளபதி விஜய்
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22 மார், 2019 - 14:30 Report Abuse
ஆரூர் ரங் பொள்ளாச்சி விஷயம் வெளிவந்தப்புறம் தியேட்டரெல்லாம் டல்லடிக்குதாமே. இளைஞர்கள் பெரும்பாலும் மொபைல் ஒரிஜினல் பொள்ளாச்சி வீடியோவில ரொம்ப பிசியாம் ஐ பி எல் க்குகூட அவ்வள்வு TRP இல்லையாம் .எதுக்கும் உங்க பட ரிலீசை ஒத்திப்போடச்சொல்லுங்க
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in