Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்

07 பிப், 2019 - 23:33 IST
எழுத்தின் அளவு:
I-wish-to-be-an-example-four-people!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, காமெடியனாக கலக்கி, தற்போது நாயகனாக உயர்ந்து நிற்கும் சந்தானம், தன் திரையுலக பயணம் குறித்து நம்முடன் பேசியதிலிருந்து:

தில்லுக்கு துட்டு - 2 படம் பற்றி...
முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் எடுக்கும் போது, இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என, நினைத்தோம். முதல் பாகத்தில், கடைசி, 20 நிமிடம், செம காமெடியாக, பரபரப்பாக இருக்கும். இரண்டாம் பாகத்தில் முழு படமுமே, அந்த மாதிரி பரபரப்பாக இருக்க வேண்டும் என, நினைத்தோம். தற்போது படம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பேய் கதைக்கே அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?

வழக்கமாக, மற்றவர்களை கலாய்த்து காமெடி செய்வதை விட, பேய் கதையில் காமெடி செய்வது, வித்தியாசமாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த வரவேற்பை தொடர்ந்து, இந்த படத்திலும், அதே விஷயத்தை தொடர்ந்துள்ளோம்.

உங்களுக்கு மட்டும் லட்டு மாதிரி ஜோடி கிடைப்பது எப்படி?
என் படத்தில் நடிக்கும் நடிகையரை, இயக்குனர் தான் தேர்ந்தெடுப்பார். சத்தியமாக நான் தேர்ந்தெடுப்பதில்லை. இந்த படத்தின் நாயகி ஷ்ரத்தா சீனிவாஸ், இரண்டு மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது முதல் படம். கதையில் கேரளா பின்னணி இருப்பதால், அவரை தேர்ந்தெடுத்தோம். நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல விதமாக அமையும்.

ஒவ்வொரு படத்திற்கும் அதிக இடைவெளி ஏன்?
இந்த படம், என் தயாரிப்பு என்பதால், படத்தை முடித்தவுடன் வெளியிட முடிகிறது. மற்ற படங்களுக்கு என்னால் முடிந்தளவு உதவி செய்துள்ளேன். படத்தை வெளியிடுவது, அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கையில் உள்ளது.

துணை பாத்திரங்களில் நடிக்க மறுக்கிறீர்களா?

எத்தனை நாளுக்கு தான், காதலுக்கு உதவியாக இருப்பது. நிறைய படங்களில் நடித்தால் பணம் சம்பாதிக்கலாம்; ஆனால், அது என் விருப்பம் இல்லை. சின்னத்திரையில் இருந்து, இன்று தயாரிப்பாளராக உயர்ந்துள்ள நான், நாலு பேருக்கு எடுத்துக்காட்டாக இருந்தால் போதும். எவ்வளவு சம்பாதித்தாலும், போகும் போது எடுத்துச் செல்வது இல்லையே.

தமிழ் சினிமாவில் இப்போது காமெடிக்கு பஞ்சமா?
அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அவரவர் பங்களிப்பை கொடுத்து கொண்டு தான் வருகின்றனர். நான் ஏதாவது சொல்லி, என் காமெடியே மொக்கை ஆகிவிடக் கூடாது.

உங்களை போலவே வந்த சிவகார்த்திகேயன் குறித்து?
ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவரது வளர்ச்சி, அசுர வளர்ச்சி. டிவியில் இருந்து வந்தாலும்,பெரிதாக சாதிக்கலாம் என்பதற்கு அவரும் ஒரு எடுத்துக்காட்டு.

எதிர்காலத்தில் இயக்குனராகும் எண்ணம் உண்டா?
கண்டிப்பாக படம் இயக்குவேன். பாதி கிணறை தாண்டி விட்டேன். நிச்சயம் விரைவில் படம் இயக்குவேன். கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன்.

மீண்டும் சிம்பு உடன் நடிப்பீர்களா?
நிச்சயமாக அதற்கேற்ற கதை, பாத்திரம் அமைந்தால் நடிப்பேன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காதலில் விழாதவர்கள் யாருமே இல்லை:ப்ரியா வாரியர்காதலில் விழாதவர்கள் யாருமே ... ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும் : ப்ரியா ஆனந்த் ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும் : ப்ரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
14 பிப், 2019 - 18:13 Report Abuse
Bhaskaran காமெடி என்னும் பெயரில் இரட்டை அர்த்தத்தை சகஜமாகியவர் இவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in