Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

காதலில் விழாதவர்கள் யாருமே இல்லை:ப்ரியா வாரியர்

31 ஜன, 2019 - 23:35 IST
எழுத்தின் அளவு:

ஒரு அடார் லவ் படத்தில், கண்ணடிக்கும் ஒரே காட்சி மூலம், உலகையே திரும்பி பார்க்க வைத்தவர், கேரளாவைச் சேர்ந்த ப்ரியா வாரியர். தற்போது, ஸ்ரீதேவி பங்களா படத்தில் நடித்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு அடார் லவ் படம், தமிழில், வரும், 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி:


உங்கள் குடும்பத்தைப் பற்றி கூறுங்கள்?


சொந்த ஊர் திருச்சூர். அப்பா, சுங்கத்துறையில் அதிகாரி. நான், கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு ஒரு தம்பியும் உண்டு.


ஒரு அடார் லவ் படம் இந்தளவு பேசப்படும் என, எதிர்பார்த்தீர்களா?


என் முதல் படமான, ஒரு அடார் லவ், தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. புருவ அசைவு மூலம், புகழ் பெற்றது, நானே எதிர்பார்க்காதது. அப்படி புருவத்தை அசைப்பது, என் பழக்கம் அல்ல. இயக்குனர் தான் அப்படி நடிக்கும்படி கூறினார். எல்லா புகழும் அவருக்கே. முதலில் என் கேரக்டர் சிறியதாக தான் இருந்தது. ஆனால் அந்த காட்சி புகழ் பெற்றதும், என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம், தமிழ், உட்பட நான்கு மொழிகளில் வெளியாவது மகிழ்ச்சி.


வழக்குகளை எல்லாம் எப்படி சமாளித்தீர்கள்?


எல்லா வழக்கையும் என் வழக்கறிஞர்களே கையாண்டனர். எதுவுமே என்னை பாதிக்கவில்லை. இயற்கையிலேயே, நான் துணிச்சலான பெண். எதையும் சந்திக்கும் ஆற்றல், எனக்கு உள்ளது.


நேரடி தமிழ் படத்தில் எப்போது நடிப்பீர்கள்?


தமிழில் நடிக்க வேண்டும் என்பது, என் கனவு. நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கதை கேட்டு வருகிறேன். படிக்கும் போதும், விளம்பர படத்தில் நடிக்கும் போதும், சென்னை வந்துள்ளேன். கொஞ்சம் தமிழ் பேச வரும். இப்போதைக்கு, என் படத்திற்கு, தமிழில் நான் டப்பிங் பேசவில்லை.


ஸ்ரீதேவி பங்களா படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?


தெரியும். அதை தயாரிப்பாளர் பார்த்துக் கொள்வார். இந்த படம், நடிகை ஸ்ரீதேவியின் கதையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒரு நடிகையின் கதை என்பது மட்டும் தெரியும்.


பிடித்த நடிகர், நடிகை?


விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும். ஆர்யா நடித்த ராஜா ராணி படத்தை, பல முறை பார்த்துள்ளேன். என், 'ரோல் மாடல்' தீபிகா படுகோனே.


உங்களுக்கு காதல் அனுபவம்?


காதலில் விழாதவர்கள் யார் இருக்கின்றனர். நிச்சயம், நான் காதல் திருமணம் தான் செய்வேன். என் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தருபவரை காதலிப்பேன்.


எப்படி வாழ வேண்டும் என விரும்புகிறீர்கள்?


ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்து வாழ வேண்டும். இந்த சின்ன வயதிலேயே, இவ்வளவு சர்ச்சையில் சிக்கியது குறித்து யோசிக்கிறேன். டாட்டூ போட்டால் கூட பிரச்னையாக்கி விடுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னை கோபப்படுத்தினால் நானும் கோபமாவேன் : ரகுல் ப்ரீத்சிங்என்னை கோபப்படுத்தினால் நானும் ... நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம் நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in