Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

என்னை கோபப்படுத்தினால் நானும் கோபமாவேன் : ரகுல் ப்ரீத்சிங்

25 ஜன, 2019 - 07:20 IST
எழுத்தின் அளவு:
என்னை-கோபப்படுத்தினால்-நானும்-கோபமாவேன்

தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான, ரகுல் ப்ரீத்சிங், இப்போது தமிழிலும், பிசியாகி விட்டார். கார்த்தியுடன் தேவ், சூர்யா உடன், என்.ஜி.கே படங்களில் நடித்து வரும் ரகுலுடன் பேசியதிலிருந்து:

தேவ் படத்தை பற்றி சொல்லுங்களேன்...


கார்த்தியுடன் நடித்த, தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேவ், ரொம்ப வித்தியாசமான காதல் கதை. மேக்னா என்ற நடுத்தர குடும்ப பெண்ணாக நடிக்கிறேன். வெவ்வேறு திசையில் பயணிக்கும், நானும், கார்த்தியும் சந்திக்கும் தருணம் அருமை; விரும்பி நடித்தேன். இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. புனே போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.


மற்ற மொழி நடிகையர் தமிழ் பேச துவங்கிவிட்டனர்: நீங்கள் எப்போது?


தமிழை புரிந்து கொள்வேன். இன்னும் பேசத்தெரியாது. இன்னும் சில மாதங்களில் சரளமாக பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.


அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவருடனும் நடித்துள்ளீர்கள்.. அவர்களைப் பற்றி?


இருவருடனும் நடித்தது மிகப்பெரிய அனுபவம். இருவரும் சிறந்த நடிகர்கள். நான், சூர்யாவின் தீவிர ரசிகை.ஓட்டல் தொழில் துவங்கப் போவதாக தகவல் வெளியானதே?அந்த மாதிரி எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடற்பயிற்சி கூடம் தான் ஆரம்பித்தேன். ஐதராபாதில் இரண்டும், வைசாக்கில் ஒன்றும் உள்ளது.


டுவிட்டரில் ரசிகர்களிடம் ரொம்ப கோபப்படுகிறீர்களே?


என்னை கோபப்படுத்தினால், கண்டிப்பாக நானும் கோபப்படுவேன்.வரலாற்று படங்களில் நடிக்க ஆர்வமில்லையா?வாழ்க்கை வரலாற்று படங்கள் ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தை ரொம்ப ரசித்தேன். ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன்.


தமிழில் கமர்ஷியல் படமாகவே நடிக்கிறீர்களே?


கமர்ஷியல் படமா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை நல்ல படம். மோசமான படம் அவ்வளவு தான். நான், நல்ல படங்களில் நடித்து வருகிறேன்.படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?இப்போதைக்கு அப்படி எதுவும் இல்லை.


உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்களே... அதன் ரகசியம் பற்றி...


பெரும்பாலானோர், உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதில்லை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, 20 சதவீதம் தான் உடற்பயிற்சி. மீதமுள்ள, 80 சதவீதம், உணவு கட்டுப்பாடு தான். இட்லி, தோசை போன்ற உணவுகள் தான் சாப்பிடுவேன். வறுத்த உணவுகள், இனிப்புகளை சாப்பிடுவதில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... காதலில் விழாதவர்கள் யாருமே இல்லை:ப்ரியா வாரியர் காதலில் விழாதவர்கள் யாருமே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in