ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி நடித்த, அடங்கமறு படம் விரைவில் வெளியாகிறது. இந்த படம் குறித்து, ஜெயம் ரவி கூறியதிலிருந்து...
அடங்கமறு எந்த மாதிரியான படம்?
போலீசாக பணியில் சேர்ந்த ஒருவனுக்கு, ஏற்படுகிற சம்பவங்கள் தான், இந்த படத்தின் கதை.
படப்பிடிப்பு , பாடல் காட்சி எல்லாம் எங்கு எடுத்தீர்கள்?
இது, நம்ம ஊர் கதை. நம்ம ஊரிலேயே படப்பிடிப்பு வைக்கலாம் என முடிவு செய்து, முழு படப்பிடிப்பும் சென்னையில் தான் எடுத்தோம். திரைக்கதைப்படி எந்தெந்த இடம் இருந்ததோ, அந்தந்த இடத்திலேயே படப்பிடிப்பை நடத்தினோம்.
படத்திற்காக உடல் மொழி மாற்றம் ஏதாவது செய்தீர்களா?
ஏற்கனவே போலீசாக நடித்துள்ளேன். போலீஸ் துறையில் நிறைய நண்பர்கள் உள்ளனர்.
அவர்களிடம் கற்றுக் கொண்டதை பயன்படுத்திஉள்ளேன். இதில், தாடி வைத்து நடித்துள்ளேன்.
உடன் நடித்தவர்கள் குறித்து?
பொன்வண்ணன் உடன் நான்காவது படம் இது. அவருடன் நடிப்பது ஜாலியாக இருந்தது.
அவரிடம் கற்றுக் கொண்ட விஷயம் அதிகம். முனீஸ்காந்த் பேசுகிற விதமே சிறப்பாக
இருக்கும். வெகுளியான நபர்.
படத்தின் நாயகி ரஷி கண்ணா பற்றி கூறுங்கள்?
ரஷி
கண்ணா, தமிழில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம்,
அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தரும். மக்கள் ஏற்றுக் கொள்ளும்
வகையில், நல்ல முக அமைப்பு உள்ளவர்.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமா?
செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் என, தயாரிப்பாளர் கூறி விட்டார். அதனால்,
படத்திற்கேற்ற வகையில் எடுத்துள்ளோம்.
ஆக் ஷன் காட்சிகள் எப்படி?
படத்திற்கு என்ன தேவையோ, அதை செய்துள்ளோம். நிமிர்ந்து நில் படம் போலவே, இந்தப்படத்திலும் ஆக் ஷன் பேசப்படும். ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக் ஷன், படத்தில் இருக்கும்.
அடுத்த படம் யாருடன், எந்தஇயக்குனருடன் பணியாற்ற ஆசை?
எனக்கு,
ஹிட் கொடுத்த இயக்குனர்களுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என ஆசை.
எந்த இயக்குனர் ஆனாலும், நல்ல கதை இருந்தால் ஓகே. தனி ஒருவன் - 2 படம்
அடுத்தாண்டு ஆரம்பமாகிறது.