Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

என் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள்: விதார்த்

28 செப், 2018 - 00:14 IST
எழுத்தின் அளவு:
என்-வெற்றிக்கு-காரணம்-இயக்குனர்கள்:-விதார்த்

ஜோதிகாவுடன், காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள விதார்த், வண்டி, சித்திரம் பேசுதடி - 2, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:


சமீபத்திய உங்கள் மகிழ்ச்சி?


சினிமாவை வெற்றிபெற வைக்கும் சக்தி பெற்றவர்கள், பத்திரிகையாளர்கள். பத்திரிகைகள் பாராட்டி, பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல், நன்றாக ஓடிய படம், மேற்கு


தொடர்ச்சி மலை. இது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.


வண்டி படத்தை பற்றி கூறுங்கள்?


வண்டி படம் சின்ன பட்ஜெட்டில் தயாராவதாக கூறினர். கதையை கேட்ட போது எப்படி எடுப்பார்கள் என, சந்தேகம் வந்தது. இந்த படத்தில், நான்கு கேமராக்கள் ஒரே நேரத்தில் இயங்கின. அடுத்தவர் நடித்தால் மற்றவர் சும்மா இருக்க முடியாது. அவரது ரியாக் ஷன் இருக்க வேண்டும்.


கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?


நான் நடிக்கும் படத்திற்கான கதையை, நானே அமர்ந்து கேட்பேன். தினமும் இரண்டு கதைகள் கேட்பேன். கதையை கேட்டதும், என் தம்பி மற்றும் மனைவியுடன் கலந்து பேசி, படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன்.


காற்றின் மொழி படத்தில் நடித்த அனுபவம்?


காற்றின் மொழி படத்தை, திட்டமிட்டதற்கு முன்னதாகவே, 37 நாட்களில் எடுத்து முடித்தனர். என்னை நம்பி பெரிய ரோலை கொடுத்தனர். முதல் நாள் படப்பிடிப்பில், ஐந்து நிமிட சீனை, ஒரே ஷாட்டில் எடுத்தனர். ஆரம்பத்தில் அந்த காட்சியில் நடிக்கத் தயங்கினேன். ஆனால், என் நடிப்பை பார்த்து விட்டு, அனைவரும் பாராட்டினர்.


அடுத்த படம் குறித்து?


அடங்காதே இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை. அவர் என்னிடம் கதை சொல்ல, பல முறை முயற்சித்ததாக கூறினார். உண்மையிலேயே எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது அவர் தான், எனக்கு வாய்ப்பு தர வேண்டும். எல்லாத்தையும் முயற்சித்து விட வேண்டியது தான். விதார்த், இந்தமாதிரி படங்களில் தான் நடிப்பார் என்ற இமேஜ் எதற்கு?


அறம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியதாக இருந்ததாமே?


ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் கோபி நயினாரை என்னிடம் அறிமுகப்படுத்தினர். அவர், என்னை ஏற்கனவே தெரியும் என்றார். 'அறம் படம் விதார்த்துக்காக உருவாக்கியது தான். நயன்தாராவுக்காக சில மாற்றம் செய்தோம்' என்றார். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால், அறம் கதையில் நடிக்க முடியாமல் போனது.


உங்களது வெற்றிக்கு காரணம்?


எனக்கான நல்ல படங்கள் வரக் காரணம், இயக்குனர்கள் தான். எனக்கேற்ற நல்ல கதையை தருவது, அவர்கள் தான். என் புகழ் அனைத்தும் இயக்குனரையே சாரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்நான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ... 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் 'மீ டூ' விவகாரம் இன்னும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in