Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சாதாரண பெண்ணாக என்னால் இருக்க முடியாது! அமலா பால்

25 மே, 2018 - 00:49 IST
எழுத்தின் அளவு:
amala-paul,அமலா-பால்

திருமணத்துக்கு பின்னும், 'பிசி'யான நடிகையாக வலம் வருகிறார், அமலா பால். அதிலும், திருமணத்துக்கு முன் இருந்தை விட, இப்போது தான், அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றால், அது, அம்மா கேரக்டராக இருந்தாலும், துணிச்சலுடன் ஏற்று, அதில் நடித்து சாதிக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...


அமலா பாலுக்கு, அம்மா ரோல் ரொம்ப பிடித்துள்ளதா?


அம்மா கணக்கு படம் வேறு; பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வேறு. இயக்குனர்கள் கதையை கூறியபோது, என் ரோல் பிடித்தது. நடிகையர், கிளாமர் மட்டும் இல்லாமல், எல்லா விதமான கதைகளிலும் நடிக்க வேண்டும். அம்மா ரோலில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை; மீடியாக்கள் தான், அதை பெரிது படுத்துகின்றன.


பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் பற்றி?


மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில், மோகன்லால், நயன்தாரா நடித்து வெளிவந்த படம் இது; அப்படியே, இப்போது தமிழ் பேசுகிறது. இந்த படத்தில் நடித்தது, ஒரு இன்ப சுற்றுலா போய் வந்த மாதிரி இருந்தது.


கொச்சி, சென்னை; இரண்டில் உங்களுக்கு பிடித்த இடம்?


கொச்சி, நான் பிறந்த ஊர். சென்னை, நான் வேலை பார்க்கும் ஊர்; இதுவும் எனக்கு தாய் வீடு போல தான். கொச்சிக்கு போய் விட்டால், அம்மா செல்லமாகி விடுவேன். நல்லா துாங்குவேன்; சாப்பிடுவேன். உடற்பயிற்சி, முறையான யோகா எல்லாம் இருக்காது. ஆனால், சென்னைக்கு வந்தால், ஏனோ தானோ என இருக்க முடியாது.


உங்க அடுத்த படம்?


அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது, ரொம்ப ஸ்பெஷலான படம். ஹீரோயின் சப்ஜெக்ட். ஒரே நாளில் காட்டுக்குள் நடக்கும் கதை. எனக்கு காடு என்றால் ரொம்ப பிடிக்கும். அங்கு இன்டர்நெட், மொபைல் என எதுவும் இருக்காது. மரங்களில் இருந்து கொய்யா, சப்போட்டா பழங்கள் பறித்து சாப்பிட்டேன். நல்ல அனுபவம்.


வெயிலை எப்படி சமாளிக்கிறீங்க?


கொஞ்ச நாள் டில்லியில் இருந்தேன். பின், கேரளாவுக்கு போய் விட்டேன். ஆடுஜீவிதம் படத்துக்காக ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது, வெயில் அதிகமாக அடித்ததால், ரொம்ப கறுத்து போய்விட்டேன். சென்னையில் தொடர்ந்து வேலைகள் இருப்பதால், இப்போது இங்கு வந்து விட்டேன். வேறு எங்கும் போகவில்லை.


பரபரப்பு செய்தியான ப்ரியா வாரியார் பற்றி?


எங்க ஊர் பொண்ணு. ஓவர் நைட்ல பிரபலம் ஆகிட்டாங்க. எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கு. ரொம்ப அழகா வேற இருக்காங்க.


தமிழக மாணவர்கள், உங்கள் ஊருக்கு வந்து, 'நீட்' தேர்வு எழுதினரே; அவர்களுக்கு எதாவது உதவி செய்யத் தோன்றியதா?


என்னிடம் யாராவது கேட்டிருந்தால், கண்டிப்பாக முடிந்த அளவு உதவி செய்திருப்பேன். இப்போது, நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை துவக்கியுள்ளேன். அதன் மூலம், 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய திட்டம் இருக்கு. இந்த மாதிரி நிறைய யோசித்து வைத்து இருக்கோம்.


அமலா பாலின் எதிர்கால திட்டம்?


ஒன்பது வருஷமா சினிமாவில் இருக்கிறேன். எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. முதல் முறையாக, ஏதாவது, 'பிசினஸ்' செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேத ஹெல்த் ப்ராடக்ட் சம்பந்தமாக, ஒரு தொழில் செய்ய முடிவு செய்துள்ளேன். மனதில் தோன்றுவதை எல்லாம், அழகாக கதையா எழுதிட்டு வருகிறேன். அமலாவால், சாதாரண பெண்ணாக மட்டும் இருக்க முடியாது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிஜி தீவு பயணம் வித்தியாசமான அனுபவம்! ரெஜினாபிஜி தீவு பயணம் வித்தியாசமான ... ரஜினி நல்லது செய்தால் அவருக்காக பிரசாரம் செய்வேன்!: ஈஸ்வரி ராவ் ரஜினி நல்லது செய்தால் அவருக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mono -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2018 - 09:21 Report Abuse
mono unnal thangamutiyatha
Rate this:
Balu - Wellington,நியூ சிலாந்து
25 மே, 2018 - 11:52 Report Abuse
Balu ஓ அப்பறம் எப்படி பட்ட பெண்
Rate this:
Mohan - Doha,கத்தார்
25 மே, 2018 - 11:28 Report Abuse
Mohan Not mohanlal check and correct details
Rate this:
tshajahan - Vellore,இந்தியா
25 மே, 2018 - 10:31 Report Abuse
tshajahan Baskar the Rascal - Mohan Lal Nadicha Padama? Adhuvum Idhu Amala Paul koduththa interview. Nambittom da.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in