Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

புதுமுகங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்! - சமந்தா

11 மே, 2018 - 01:12 IST
எழுத்தின் அளவு:
Ill-be-a-guide-to-new-comers-says-Samantha

கோலிவுட், டோலிவுட் என திருமணத்துக்கு பின்னும், ரொம்பவே, பிசியாக வலம் வருகிறார், சமந்தா. தமிழில், இரும்புத்திரை, நடிகையர் திலகம், சீமராஜா என, அவர் நடித்த பல படங்கள், ரிலீசுக்காக அணிவகுத்து நிற்கின்றன. சமந்தாவுடன் பேசியதில் இருந்து:

இரும்புத்திரை படம் குறித்து?
அறிமுக இயக்குனர்கள் என்றால், எனக்கு கொஞ்சம் பயம். ஆனால், இயக்குனர் மித்ரன், இந்த படத்தின் கதையை கூறியபோது, 10 படம் இயக்கிய அனுபவ இயக்குனராக தெரிந்தார். அதனால், எனக்கும் நம்பிக்கை வந்து, நடிக்க சம்மதித்தேன். இந்தப்படத்தில், ரொம்பவே அமைதியான கேரக்டர் எனக்கு. மனநல மருத்துவராக நடித்திருக்கிறேன். நான், நானாகவே இந்த படத்தில் நடித்தேன்.

விஷாலுடன் நடித்த அனுபவம் எப்படி?
விஜய், சூர்யா, மகேஷ்பாபு என சீனியர் நடிகர்களோடு தான், இதுவரை நடித்துள்ளேன். விஷாலுடன் நடிக்கும் போது, நான் சீனியர் போல் உணர்கிறேன். இரும்புத்திரை படத்தில் விஷாலுடன் நடித்தது பெருமையாக உள்ளது.

படங்கள் பற்றி?
திருமணத்திற்கு பின், நான் நடித்த, ரங்கஸ்தலம் படம், தெலுங்கில் வெளியாகி, பெரிய வெற்றி பெற்றது. திருமணத்திற்கு பின் நடிக்கும் படங்கள், நடிகையருக்கு, வெற்றியை தராது என, கூறப்படுவது உண்டு; அதை உடைப்பதற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டும் போதாது. 10 படங்கள் வெளியாகி, வெற்றி பெற வேண்டும். அப்போது தான், திருமணத்திற்கு பின்னும் நடிகையர் நடிக்கலாம் என்ற நிலை வரும். இது, என்னால் மட்டும் முடியுமா என தெரியவில்லை. ஆனால், வரப்போகும் புதுமுகங்களுக்கு, நான் ஒரு வழிகாட்டியாக இருப்பேன்.

திருமணத்திற்கு பின் நடிக்கும் உங்களுக்கு, குடும்பத்தினர் ஆதரவு எப்படி இருக்கிறது?
தெலுங்கில், நாகார்ஜுனா குடும்பம், செல்வாக்கு மிக்கது. அந்த குடும்பத்தில், இப்போது நானும் ஒரு அங்கம். அவர்கள் எனக்கு ரொம்ப ஆதரவாக உள்ளனர். எந்த பயமும் இல்லாமல், ஷூட்டிங் போகிறேன்.

உங்களின் ஆசை?
நடிகையர் திலகம் படத்தில், நான் கதாநாயகி இல்லை. ஆனால், என் பாத்திரம் பிடித்திருந்தது. ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன். மற்றபடி, நான் தான் போஸ்டரில் இருக்க வேண்டும் என யோசிப்பது இல்லை. எனக்கு தரும் வேலையை, சிறப்பாக செய்கிறேன்.

இரும்புத்திரை படத்தில் கிடைத்த அனுபவம் என்ன?
மொபைல், இன்டர்நெட், வாட்ஸ் - ஆப் போன்ற சமூகவலைதளங்களில், மக்கள் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு, இந்த படம், மிகப் பெரிய விழிப்புணர்வைத் தரும். என் உறவினர்கள் நிறைய பேர், ஆன்லைன் மோசடியில் ஏமாந்து, பணத்தை இழந்துள்ளனர். சமூகவலைதளங்கள், இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகி விட்டது. அவற்றுக்கு நாம் அடிமையாகிறோம் என்பது தவறு; அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வையும், இப்படம் ஏற்படுத்தும்.

சிவகார்த்திகேயன் படம் பற்றி?
சீமராசா பக்கா கமர்ஷியல் படம். பொன்ராம் - சிவா கூட்டணி அருமை. நான் அவ்வளவாக கிராமத்து ரோலில் நடித்தது கிடையாது. சீமராசா அந்த குறையை போக்கும்.

ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி?
நிறையபேர் அதை பற்றி கேட்கிறார்கள். அது ஒரு ஸ்டாரங்கான ரோல், படத்திற்கு அந்தகாட்சி தேவைப்பட்டது, தவிர்க்க முடியவில்லை.

கணவருக்கு சினிமா ஆலோசனை வழங்குவது உண்டா?
வீட்டில் 6 மணிக்கு மேல் சினிமா பற்றி எதுவும் பேசுவது கிடையாது. குடும்பத்தோடு செலவு செய்யும் நேரம் அது. வீட்டில் யாரும் ஸ்டார் என்று நினைப்பது கிடையாது.

எதிர்கால திட்டம்?
எட்டு ஆண்டுகளாக சினிமாவில் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். சினிமா தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதனால் சினிமாவில், ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து நீடிப்பேன்.

சமூகவலைதளங்களில் நிறைய கவர்ச்சி படங்களை, அப்லோட் செய்கிறீர்களே?
கடற்கரையில் இருக்கும் போது, அதற்கான ஆடைகளை அணியாமல், சேலை கட்ட முடியுமா? நான் எந்த படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்பதை, மற்ற யாரும் முடிவு செய்யக்கூடாது. எந்த கட்டுப்பாடும் எனக்கு இல்லை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவை ஆளக்கூடிய முகம் எனக்கு : யோகி பாபுதமிழ் சினிமாவை ஆளக்கூடிய முகம் ... பிஜி தீவு பயணம் வித்தியாசமான அனுபவம்! ரெஜினா பிஜி தீவு பயணம் வித்தியாசமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in