Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

எனக்கு கல்யாணம் நடக்குமா என தெரியவில்லை! - கவுதம் கார்த்திக்

13 ஏப், 2018 - 01:36 IST
எழுத்தின் அளவு:
I-do-not-know-how-to-marry!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன், கவுதம் கார்த்திக், தற்போது நடித்து வரும், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் பற்றியும், தன் திரையுலக அனுபவம் குறித்தும் நம்மிடையே பேசியதிலிருந்து:

இருட்டு அறையில் முரட்டுக் குத்து எந்த மாதிரி படம்?
இந்த படத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், காமெடி, அடல்ட் பேய் படம். குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே, இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு. ஹரஹர மஹாதேவகி படத்தை பிடிக்கவில்லை என்றால், இந்த படமும் பிடிக்காது.

முந்தைய படத்தை போலவே இரட்டை அர்த்த வசனங்கள் இந்தப் படத்திலும் உண்டா?
இரட்டை அர்த்த வசனங்கள், ஹரஹர மஹாதேவகி படத்தில் இருந்திருக்கலாம்; இந்த படத்தில், அனைத்துமே நேரடியாக தான், பேசியிருப்போம்.

விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி?
நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும், ஏதாவது ஒரு விஷயம் கற்றுக் கொள்வேன்.ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில்,விஜய் சேதுபதியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் நடிப்பதே எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. உண்மையில் அவர் எனக்கு அண்ணனாகவே மாறிவிட்டார்.

மிஸ்டர் சந்திரமவுலி படம் எந்த கட்டத்தில் உள்ளது?
சந்திரமவுலி படம், முடியும் நிலையில் உள்ளது. என் அப்பா கார்த்திக் தான், இப்படத்தில் எனக்கு அப்பாவாக நடித்து உள்ளார்.

அப்பா கூட நடித்தது பயமாக இருந்ததா?
துவக்கத்தில் பயமாகத்தான் இருந்தது. போகப் போக அனைத்தும் சரியாகி விட்டது. வீட்டில் எப்படி இருந்தோமோ, அப்படியே படத்தில் இயல்பாக இருந்தோம். படத்தில் நடிக்கும் போது, எந்த அறிவுரையும் அவர் கூறியது இல்லை; ஆனால் நேரடியாக சொல்லாமல், பல விஷயங்களை நடிப்பிலேயே சொல்லியுள்ளார். சின்ன சின்ன விஷயங்களை கூட திரையில் கொண்டு வந்து, படத்தை அழகாக்கி உள்ளார்.

மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பீர்களா?
நான் எப்போதும் ரசிக்கும், சிறந்த மனிதர் மணிரத்னம். என் குரு. அவர் படம் அறிவிக்கும் போது, என் பெயர் இருக்காதா என, சின்ன ஆசை இருக்கும். அவர் அழைத்தால் நிச்சயம் செல்வேன்.

மிகப்பெரிய ஹீரோக்களில் யாருடன் நடிக்க ஆசை?
மிகப் பெரிய ஹீரோ என்றால், என் அப்பா தான்; இரண்டாவது, விஜய் சேதுபதி. இவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை.

காதல் சங்கதி ஏதாவது உண்டா?
காதல் என்றால், அது என் பைக் மீது தான். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், பைக்கை ஓட்ட முடியவில்லை. நேரம் கிடைத்தால், ரொம்ப துாரம் பைக்கில் செல்ல வேண்டும் என, ஆசை உள்ளது.

நண்பர்களைப் பற்றி?
சினிமாவில் நடிக்க வந்த பின், நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை அழகாகும் என்பர். மெல்வின், டேனியல், லல்லு, சித்தார்த் இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்கள்.

அப்பாவுடன் அரசியலில் ஈடுபடுவீர்களா?
அப்பாவுக்கும், எனக்கும் அரசியல் பற்றி எந்த பேச்சும் இல்லை. அவர் அரசியலில் என்ன செய்கிறார் என்பது கூட எனக்கு தெரியாது.

சினிமாவில் பிடித்த நாயகி?
த்ரிஷா தான், எனக்கு பிடித்த நாயகி.

திருமணம் எப்போது?
திருமணத்தை பற்றி நானோ, என் வீட்டிலோ, யாரும் யோசிக்கவில்லை. முதலில் நல்லா நடித்து சம்பாதிக்க வேண்டும். அதற்கு இன்னும், 10 ஆண்டுகள் ஆகலாம். எனக்கு கல்யாணம் ஆகுமா, இல்லையா என்பது கூட, எனக்கு தெரியாது. அப்படி ஆனால், அது காதல் திருமணமாகவும், பெற்றோரின் சம்மதத்துடனும் தான் நடக்கும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை : கஸ்துாரிசினிமா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை : ... சாவித்திரி வேடத்தில் நடித்தது சிரமமாக இருந்தது : கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடித்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

koyango - chennai,இந்தியா
13 ஏப், 2018 - 16:33 Report Abuse
koyango கார்த்திக் பிள்ளையாக இருக்கவேண்டாம். முத்துராமனின் பேரனாக இருங்கள்
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
13 ஏப், 2018 - 15:24 Report Abuse
Shanu 20 வயசு ஆன உடனே கல்யாணமா?? இந்த வயசுல கல்யாணம் எதற்கு.
Rate this:
13 ஏப், 2018 - 15:08 Report Abuse
JayaShankar no marriage
Rate this:
13 ஏப், 2018 - 15:08 Report Abuse
JayaShankar no
Rate this:
13 ஏப், 2018 - 10:52 Report Abuse
Susainathan how dare they saying adult jokes based on the movie so its not family entertainment should be add sex porn movie list this kind of movie not related to watch peoples life getting spoiled
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in