Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

'ரசிகர்கள் விரும்பும்படி நடிக்க வேண்டும்' : மேகாலி

23 மார், 2018 - 03:03 IST
எழுத்தின் அளவு:
plan-to-fulfill-Fans-expectation:-Megali

ஆருத்ரா படம் மூலம் நாயகியானவர், நடிகை மேகாலி. பெங்காலைச் சேர்ந்த இவர், தன் அடுத்தடுத்த படங்களில், தமிழில் பாடி, பேசி நடிக்க உள்ளார். 'போட்டோ ஷூட்'டில் இருந்த, மேகாலியுடன் பேசியதிலிருந்து:


முதலில் நடித்த படம் எது?


பரபரப்பாக பேசப்பட்ட, நிர்பயா கதையில் தான், நான் முதலில் நடித்தேன். பெங்காலி மொழிப்படம் அது; ஆனால், அந்த படம் வெளியாகவில்லை. அதன் பின், பா.விஜய் உடன், ஆருத்ரா படத்திலும், ஸ்கெட்ச் படத்திலும் நடித்தேன். தற்போது, ரகடம் படத்தில், இரட்டை வேடத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழ் படம் ஒன்றிலும் நடிப்பதற்கான, பேச்சு நடந்து வருகிறது.


பெங்காலியரான நீங்கள், தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி?


என் குடும்பத்தில் அனைவரும், இசைத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள். நான், என் அம்மா அனைவரும், கமல் ரசிகர்கள். கும்கி படத்தை பார்த்த போது தான், நானும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என, ஆசை வந்தது. அதற்கான முயற்சியில் இறங்கினேன். தமிழ் கற்றுக் கொண்டேன். பரதம், கதக், கிளாசிக்கல் உள்ளிட்ட, நடனங்களையும் பயின்றேன்.


நீங்களே பாடல் பாடி, 'டப்பிங்' பேசப்போவதாக கூறுகின்றனரே?


ஆமாம்; நான், அடுத்து நடிக்கும் படத்தில், நானே சொந்த குரலில் பாடப்போகிறேன். 'மைம்' கோபி, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். என் பாத்திரத்திற்கு, விரைவில் நானே, 'டப்பிங்' பேசுவேன்.


ஸ்கெட்ச் படத்தில், விக்ரமுடன் நடித்த அனுபவம் எப்படி?


அவர், ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன், ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன். நிறைய கற்றுக் கொடுத்தார். சினிமாவில், அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.


சினிமாவில், உங்கள் கவர்ச்சி எந்தளவுக்கு இருக்கும்?


கதைக்கு தேவை என்றால், கவர்ச்சியாக நடித்து தான் ஆக வேண்டும். நான் நடிக்க வந்த பின், பெங்காலி பெண்ணாக இருக்க மாட்டேன். அந்த கதாபாத்திரமாக மாற வேண்டும். ரசிகர்களுக்காக தான் நடிக்கிறோம். அவர்கள் விரும்பும்படி நடிக்க வேண்டும்.


ஒரே சமயத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் என, இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தால், யார் படத்தில் நடிப்பீர்கள்?


நிச்சயமாக, விக்ரம் படத்தில் தான் நடிப்பேன்.


யாருடன் நடிக்க ஆசை?


ரஜினி, கமல், நயன்தாரா உடன் நடிக்க ஆசை.


அரசியலில் ரஜினி, கமல் இருவரில், உங்கள் ஆதரவு யாருக்கு?


எனக்கு அரசியல் தெரியாது. இருவரும், மக்களுக்கு நல்லது செய்வர் என, நம்பிக்கை இருக்கிறது.


எதிர்கால திட்டம்?


நல்ல படங்களை தர வேண்டும். எனக்கு நடிப்பது, மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் விரும்பும்படி தரமான படங்களை கொடுக்க வேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை தர முடியாது : பி.ஆர்.விஜயலட்சுமிஅடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை ... எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ப்ரியா வாரியர் எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in