Advertisement

இயக்குநர் சிகரம் பாலசந்தர்

பயோகிராபி

balachander-profile

Advertisement

  • இயற்பெயர் - கே பாலசந்தர்
  • சினிமா பெயர் - கே பாலசந்தர்
  • பிறப்பு - 09-ஜுலை-1930
  • இறப்பு - 23-டிசம்பர்-2014
  • பிறந்த இடம் - நல்லமாங்குடி - தஞ்சை மாவட்டம்
  • சினிமா அனுபவம் - 1964-2014
  • துணைவி - ராஜம்
  • குழந்தைகள் - பால கைலாசம் (இறப்பு) - பிரசன்னா - புஷ்பா கந்தசுவாமி
  • பெற்றோர் -கைலாசம் ஐயர் - காமாட்சியம்மாள்

விருதுகள்

தமிழ்நாடு அரசு மாநில விருது

1968 எதிர் நீச்சல்
1968 தாமரை நெஞ்சம்
1978 தப்புத்தாளங்கள்
1980 வறுமையின் நிறம் சிவப்பு
1980 அக்னி சாட்சி
1989 புது புது அர்த்தங்கள்
1991 வானமே எல்லை
1993 ஜாதி மல்லி


மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து கலைமாமணி' 'அண்ணா விருது' 'எம் ஜி ஆர் விருது' கலைஞர் விருது' ஆந்திர அரசிடமிருந்து 'நந்தி விருது'.

ஃபிலிம் ஃபேர் விருது

1974 அவள் ஒரு தொடர்கதை
1975 அபூர்வ ராகங்கள்
1978 மரோ சரித்ரா (தெலுங்கு)
1980 வருமையின் நிறம் சிவப்பு
1981 தண்ணீர் தண்ணீர்
1981 ஏக் துஜே கேலியே (இந்தி)
1984 அச்சமில்லை அச்சமில்லை
1985 சிந்து பைரவி
1989 புது புது அர்த்தங்கள்
1991 வானமே எல்லை
1995-ல் 'வாழ்நாள் சாதனையாளர் விருதும'; வழங்கப்பட்டது.

Advertisement

தேசிய விருது

1969 இரு கோடுகள்
1975 அபூர்வ ராகங்கள்
1981 தண்ணீர் தண்ணீர்
1984 அச்சமில்லை அச்சமில்லை
1988 ருத்ர வீணா (தெலுங்கு)
1991 ஒரு வீடு இரு வாசல்

கௌரவ டாக்டர் பட்டம்

2005-ல் சத்தியபாமா பல்கலைக் கழகம்
2005-ல் அழகப்பா பல்கலைக் கழகம்
2007-ல் சென்னை பல்கலைக் கழகம்

பத்மஸ்ரீ விருது
1987-ல் இந்திய அரசால் 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது.

Advertisement

போட்டோ

கே பாலசந்தர் அவர்களின் போட்டோ தொகுப்புகள்

Advertisement

சுவாரஸ்யங்கள்

கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்

Left Quote கே பாலசந்தர் திரைத்துறைக்கு வருவதற்குமுன் முதன் முதலாக எழுதிய நாடகம் "சினிமா விசிறி" என்ற நாடகமாகும். Right Quote

Left Quote எம்.ஜி.ஆர் நடித்த "தெய்வத்தாய்" திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் வாயிலாக திரைத்துறைக்குள் நுழைந்தார் கே பாலசந்தர். Right Quote

Advertisement

பட்டப்படிப்பை முடித்த கே பாலசந்தர், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக தனது முதல் பணியை தொடங்கினார்.

1950 ஆம் ஆண்டு சென்னையில், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை கிடைத்து, பணியாற்றத் தொடங்கினார்.

கே பாலசந்தரின் "ராகினி ரெக்ரியேஷன்" என்ற குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நாகேஷ். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட நாடகம் தான் "நீர்க்குமிழி".

யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், நேரிடையாக திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கே பாலசந்தர். படம் "நீர்க்குமிழி".

திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு தயாரித்து, கே பாலசந்தர் இயக்கிய திரைப்படம் "பத்தாம் பசலி". நாயகன் நாகேஷ்.

நடிகை சௌகார் ஜானகி நாயகியாக நடித்து, தயாரித்து, கே பாலசந்தர் இயக்கிய திரைப்படம் "காவியத் தலைவி". "உத்தர் பல்குனி" என்ற பெங்காலி திரைப்படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படம்.

நடிகர் ஜெமினி கணேசன், நாராயணி பிலிம்ஸ" சார்பில் நாயகனாக நடித்து, தயாரித்த "நான் அவனில்லை" திரைப்படத்தை இயக்கியதும் இயக்குநர் கே பாலசந்தர்.

கே.பாலசந்தர் எழுதி இயக்கிய நாடகம் "புஷ்பலதா". மூன்று கல்லூரி மாணவர்கள் புஷ்பா, லதா என்ற இரண்டு பெண்களைப் பற்றி விமர்சிப்பதைத்தான் நாடகாமாக எழுதியிருந்தார். ஆனால் நாடகம் முடியும்வரை புஷ்பாவும் வரமாட்டாள் லதாவும் வரமாட்டாள். விறுவிறுப்பான காட்சி அமைப்புகளை உருவாக்கி இயக்கியிருந்த இந்த நாடகம் கே பாலசந்தருக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நாயகனாக நடிக்க வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படம் "எதிரொலி".

இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு இரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

நூறு படங்களுக்கு மேலாக பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.

தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படங்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார் அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படம் கமல், ரஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும்.

இந்தி படங்கள் ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 101 படங்கள் வெளிவந்துள்ளன. இயக்கிய முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதேபோல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம்.

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம், ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம் இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி. ஒருமுறை "பெப்சி தலைவராக இருந்திருக்கிறார்.

பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.

வரலாறு

Balachander History

Advertisement

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார் கே.பாலசந்தர். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.

 

அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது.பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலச்சந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த பாலசந்தர், 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

 

1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.

 

இவர் முதலில் எழுதிய நாடகம் 'சினிமா விசிறி'. பாலசந்தரின் மற்றொரு நாடகமான 'மெழுகுவர்த்தி' என்ற நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்ஜிஆர், பாலசந்தர் போன்ற இளைஞர்கள் திரைப்பட உலகிற்கு தேவை, அவர் ஆசைப்பட்டால் நானே அழைத்து செல்வேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் தன்னுடைய படமான 'தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தார். முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார்.

 

நடிகர் நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எழுதிய நாடகம் 'நீர்க்குமிழி'. இந்த நாடகத்தை பார்த்த பிரபல இயக்குநர் வேலன், படமாக எடுக்க ஆசைப்பட்டு, பாலசந்தரை அணுகி, அவரையே திரைப்படத்தையும் இயக்குமாறு கேட்டுக்கொண்டார். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத நம்மால் முதன் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடியுமா என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் சம்மதம் தெரிவித்து படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

 

இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்னைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். தொடர்ந்து 'நாணல்', 'பாமா விஜயம்', 'தாமரை', 'நெஞ்சம்' 'எதிர் நீச்சல்', 'பூவா தலையா', 'காவியத் தலைவி', 'எதிரொலி', 'பத்தாம் பசலி', 'நூற்றுக்கு நூறு', 'புன்னகை', 'வெள்ளி விழா', 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அவள் ஒரு தொடர்கதை', 'நான் அவனில்லை', 'மூன்று முடிச்சு' என்று 'பார்த்தாலே பரவசம்' வரை 100 படங்களை இயக்கி இமாலய சாதனை புரிந்து, 'இயக்குநர் இமயம்' என்ற அடைமொழியோடு உயர்ந்து நிற்கின்றார்.

 

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 டிசம்பர் 2014 அன்று அனுமதிக்கப்பட்ட பாலசந்தர், சிகிச்சை பலனின்றி 23 டிசம்பர் 2014-ல் காலமானார்.அறிமுகம்

கே பாலசந்தரால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் பட்டியல்

S.No. நடிகர், நடிகைகள் படம்
1 கமலஹாசன் அரங்கேற்றம்
2 ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
3 .ஸ்ரீதேவி மூன்று முடிச்சு
4 ஸ்ரீவித்யா நூற்றுக்கு நூறு
5 ஷோபா நிழல் நிஜமாகிறது
6 சரத்பாபு நிழல் நிஜமாகிறது
7 மௌலி நிழல் நிஜமாகிறது
8 சுஜாதா அவள் ஒரு தொடர்கதை
9 ஜெய்கணேஷ் அவள் ஒரு தொடர்கதை
10 படாபட் ஜெயலட்சுமி அவள் ஒரு தொடர்கதை
11 சிரஞ்சீவி 47 நாட்கள்
12 சரிதா தப்புத்தாளங்கள்
13 டெல்லி கணேஷ் பட்டினப்பிரவேசம்
Advertisement
14 மாதவி எங்க ஊர் கண்ணகி
15 ராதா ரவி மன்மத லீலை
16 Y. விஜயா மன்மத லீலை
17 S.V சேகர் வறுமையின் நிறம் சிவப்பு
18 மீரா பட்டினப்பிரவேசம்
19 மகேந்திரன் நவக்கிரகம்
20 பிரகாஷ்ராஜ் டூயட்
21 அருந்ததி தண்ணீர் தண்ணீர்
22 சார்லி பொய்க்கால் குதிரை
23 பவித்ரா அச்சமில்லை அச்சமில்லை
24 சிவச்சந்திரன் பட்டினப்பிரவேசம்
25 அகல்யா அச்சமில்லை அச்சமில்லை
26 திலீப் வறுமையின் நிறம் சிவப்பு
27 மு நடராஜ் மூன்று முடிச்சு
28 வாத்தியார் ராமன் தண்ணீர் தண்ணீர்
29 விவேக் புது புது அர்த்தங்கள்

திரைப்படங்கள்

கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்

1 நீர்க்குமிழி

2 நாணல்

3 மேஜர் சந்திரகாந்த்

4 பாமா விஜயம்

5 அனுபவி ராஜா அனுபவி

6 எதிர் நீச்சல்

7 தாமரை நெஞ்சம்

8 பூவா தலையா

9 இரு கோடுகள்

10 பத்தாம் பசலி

11 எதிரொலி

12 நவக்கிரகம்

13 காவியத் தலைவி

14 நூற்றுக்கு நூறு

15 புன்னகை

16 கண்ணா நலமா

17 வெள்ளி விழா

18 அரங்கேற்றம்

19 சொல்லத்தான் நினைக்கிறேன்

20 அவள் ஒரு தொடர்கதை

21 நான் அவனில்லை

22 அபூர்வ ராகங்கள்

23 மன்மத லீலை

24 மூன்று முடிச்சு

25 அவர்கள்

26 பட்டினப்பிரவேசம்

27 நிழல் நிஜமாகிறது

Advertisement

28. தப்புத்தாளங்கள்

29. நினைத்தாலே இனிக்கும்

30. நூல் வேலி

31. வறுமையின் நிறம் சிவப்பு

32. எங்க ஊர் கண்ணகி

33. தில்லு முல்லு

34. தண்ணீர் தண்ணீர்

35. 47 நாட்கள்

36. அக்னி சாட்சி

37. பொய்க்கால் குதிரை

38. அச்சமில்லை அச்சமில்லை

39. கல்யாண அகதிகள்

40. சிந்து பைரவி

41. புன்னகை மன்னன்

42. மனதில் உறுதி வேண்டும்

43. உன்னால் முடியும் தம்பி

44. புது புது அர்த்தங்கள்

45. ஒரு வீடு இரு வாசல்

46. அழகன்

47. வானமே எல்லை

48. ஜாதி மல்லி

49. டூயட்

50. கல்கி

51. பார்த்தாலே பரவசம்

52. பொய்

பிறமொழி திரைப்படங்கள்

கே பாலசந்தர் கதை, இயக்கத்தில் வெளிவந்த பிறமொழி திரைப்படங்கள்

1 ஊஞ்ச்சி லோக் (ஹிந்தி) (மேஜர் சந்திரகாந்த்) - கதை

2 ஹிந்தகுலு ஒஸ்துனாரு ஜாக்ரதா (தெலுங்கு) (நாணல்) - கதை

3 பலே கோடலு (தெலுங்கு) (பாமா விஜயம்) - கதை, திரைக்கதை, இயக்கம்

3 சுக துக்காலு (தெலுங்கு) (மேஜர் சந்திரகாந்த்) - கதை

4 தீன் பகுராணியான் (ஹிந்தி) (பாமா விஜயம்) - கதை

5 தீன் பகுராணியான் (ஹிந்தி) (பாமா விஜயம்) - கதை

6 சத்திய காலபு சத்தியா (தெலுங்கு) (பத்தாம் பசலி) - கதை, திரைக்கதை

7 சிரஞ்சீவி (தெலுங்கு) (நீர்க்குமிழி) - கதை

8 சம்பரால ராம்பாபு (தெலுங்கு) (எதிர்நீச்சல்) - கதை

9 பீகர நிமிஷங்கள் (மலையாளம்) (நாணல்) - கதை

10 பொம்மா பொரூசா (தெலுங்கு) (பூவா தலையா) - கதை, திரைக்கதை, இயக்கம்

11 முகப் பிரேமா (தெலுங்கு) (தாமரை நெஞ்சம்) - கதை

12 லாக்கோன் மே ஏக் (ஹிந்தி) (எதிர்நீச்சல்) - கதை

13 மைன் சுந்தர் ஹ{ன் (ஹிந்தி) (சர்வர் சுந்தரம்) - கதை

14ருத்ர வீணா - (தெலுங்கு)

3 ஆறடி மண்ணின்டே ஜென்மே (மலையாளம்) (நீர்க்குமிழி) - கதை

15 ஆய்னா (ஹிந்தி) (அரங்கேற்றம்) - கதை, திரைக்கதை, இயக்கம்

16 ஜீவித ரங்கமு (தெலுங்கு) (அரங்கேற்றம்) - கதை

17 அந்துலேனி கதா (தெலுங்கு) (அவள் ஒரு தொடர்கதை) - திரைக்கதை, இயக்கம்

18 தூர்ப்பு படமரா (தெலுங்கு) (அபூர்வ ராகங்கள்) - கதை

19 பலப் பரிக்ஷானம் (மலையாளம்) (பூவா தலையா) - கதை

20 மரோ சரித்ரா (தெலுங்கு) - கதை, திரைக்கதை, இயக்கம்

21 தப்பித தாளா (கன்னடம்) - கதை, திரைக்கதை, இயக்கம்

22 அந்த மைன அனுபவம் (தெலுங்கு) (நினைத்தாலே இனிக்கும்) - இயக்கம்

23 குப்பிடு மனசு (தெலுங்கு) (நூல்வேலி) - திரைக்கதை, இயக்கம்

24 இதி கதை காது (தெலுங்கு) (அவர்கள்) - கதை, திரைக்கதை, இயக்கம்

25 கழுகன் (மலையாளம்) (தப்புத்தாளங்கள்) - கதை

26 ஆகலி ராஜ்யம் (தெலுங்கு) (வறுமையின் நிறம் சிவப்பு) - கதை, திரைக்கதை, இயக்கம்

27 ஆடவாள்ளு மீகு (தெலுங்கு) - திரைக்கதை, இயக்கம்

28 தொலி கோடி தசிந்தி (தெலுங்கு) (எங்க ஊர் கண்ணகி) - கதை, திரைக்கதை

29 ஏக் துஜே கே லியே (ஹிந்தி) (மரோசரித்ரா) - கதை, திரைக்கதை, இயக்கம்

30 ரோஜுலு (தெலுங்கு) (47 நாட்கள்) - திரைக்கதை, இயக்கம்

31 பெங்கியள்ளி அரளித ஹ{வு (கன்னடம்) (அவள் ஒரு தொடர்கதை) - திரைக்கதை, இயக்கம்

32 ஜரா ஸி ஜிந்தகி (ஹிந்தி) (வறுமையின் நிறம் சிவப்பு) - இயக்கம்

33 இரடு ரேகைகளு (கன்னடம்) (இரு கோடுகள்) - திரைக்கதை, இயக்கம்

34 கோகிலம்மா (தெலுங்கு) - கதை, திரைக்கதை

35 ஏக் நயி பெஹலி (ஹிந்தி) (அபூர்வ ராகங்கள்) - கதை, திரைக்கதை, இயக்கம்

36 முகில்ல மல்லிகே (கன்னடம்) (தாமரை நெஞ்சம்) - கதை, திரைக்கதை, இயக்கம்

37 சுந்தர சொப்னகளு (கன்னடம்) (சொல்லத்தான் நினைக்கிறேன்) - திரைக்கதை, இயக்கம்