சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் ஓவியா. இந்த தொடரின் கதை இதுதான். ஓவியா ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். நல்ல படிப்பாளி. படித்து நேர்மையாக எதையும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவள். அவளது தோழியும், உடன் படிப்பவளுமான காயத்ரி பணக்கார வீட்டுப் பெண். நினைத்ததை சாதிக்க எந்த லெவலுக்கும் செல்கிற திமிரான பெண். இருப்பதை கொண்டு திருப்தி படுகிறவர் ஓவியா. மேலும் மேலும் என்று ஓடிக் கொண்டிருப்பவள் காயத்ரி. இந்த இருவருக்கும் இடையிலான மோதலும், நட்பும்தான் தொடரின் திரைக்கதை.
இதில் ஓவியாவாக நடிக்கிறவர் கோமதி பிரியா. மதுரை பொண்ணு. சீரியலின் ஆடிசனில் தேர்வாகி நடிக்கிறார். நிஜத்திலும் நன்றாக படிக்கிற பொண்ணு. படிப்புக்கு சின்ன கேப் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். காயத்ரியாக நடிப்பவர் ஹர்ஷாலா பெங்களூர் பொண்ணு. இதுவரை 3 கன்னட சீரியல்களில் நடித்த அனுபவம் பெற்றவர். இந்த சீரியல் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இருவரின் மோதலும் சூடுபிடித்திருக்கிறது. வித்தியாசமான கதை களம் என்பதால் சீரியலுக்கு வரவேற்பும் கூடியிருக்கிறது.