ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குளிர் 100 டிகிரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சீவ். அதன் பிறகு நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக படங்களில் நடித்தார். திரைப்படத்தில் சரியான இடத்தை பிடிக்க முடியாதலால் சின்னத்திரைக்கு வந்தார். ராஜா ராணி தொடரில் அவர் தான் ஹீரோ. ஆலியா மானசா அவரது ஜோடியாக நடித்தார். ராஜா ராணி தற்போது 350வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரையில் நடித்தாலும் சஞ்சீவின் கனவு சினிமா தான். சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் முன்னோட்டமாக தற்போது ஒரு குறும்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மன்னிப்பாயா என்ற அந்தப் படத்தில் திவ்யா, சஞ்சீவ் ஜோடியாக நடித்துள்ளார், ஜே.சத்தியசீலன் தயாரித்து, இயக்கி உள்ளர், சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டேன்லி ராய் பிரான்சிஸ் இசை அமைத்துள்ளார். காதலன் காதலிக்கு இடையில் வரும் சின்ன சின்ன ஈகோவும், அது முடிவுக்கு வருவதும் தான் கதை.