Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திவ்யா ஸ்ரீதர் கள்ளத்தொடர்பில் இருந்தார்! ஆடியோ மற்றும் வாட்ஸ் ஆப் ஆதாரங்களை வெளியிட்ட அர்னவ்

06 ஜூன், 2023 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Divya-Sridhar-was-in-a-cheating-relationship!-Arnav-posted-the-audio-and-WhatsApp-sources

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், நடிகர் அர்னவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில நாட்களிலேயே அர்னவ் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகாராளித்தார். தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், தவிர ஒரு ஆணை காதலிப்பதாக ஏமாற்றி அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாகவும் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், 'முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும், என்னுடைய கேரியரை காலி செய்வதற்காக சீரியல் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்' என்று பேட்டியளித்துள்ளார். மேலும், திவ்யா, அர்னவின் கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது போல் வாட்ஸப் ஸ்கீரின்ஷாட்டையும் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பாண்டவர் இல்லம் தேன்மொழியை உருகி உருகி காதலிக்கும் உதவி இயக்குநர்!பாண்டவர் இல்லம் தேன்மொழியை உருகி ... மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இனி மீனாட்சியாக ஸ்ரீரஞ்சனி! மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11 ஜூன், 2023 - 13:06 Report Abuse
Krishnamurthy Venkatesan பொது வெளியில் இவர்களின் அந்தரங்க விஷயங்களை ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வெளியிடுகிறார்கள். மீடியாக்களுக்கு நல்ல தீனி. ஆனால் இந்த செய்திகள் நம் கலாசாரத்திநை கேவலம்/கொச்சை படுத்துகிறார்கள். இவர்கள் மீது நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை போன்றவர்களால்தான், சாதாரண குடும்பத்திலும் சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி விவாகரத்து வரை செல்கின்றனர். இனி திரை நட்சத்திரங்களின் திருமணத்தை ஆஹா ஓஹோ என பாராட்டாமல், சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்போரை பெருமை பட செய்திகள் வெளியிடுங்கள்.
Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
09 ஜூன், 2023 - 15:59 Report Abuse
தஞ்சை மன்னர் சின்னத்திரை கதையை விட உங்க கதை பல கள்ளத்தொடர்பு வைத்து இருக்கும் போல விவேக் காமெடி தான் நினைவுக்கு வருது
Rate this:
vijay - coimbatore,இந்தியா
08 ஜூன், 2023 - 10:09 Report Abuse
vijay அய்யய்யே...ஒரு ஆணையும் ஏமாற்றி உள்ளார்? நான் நினைப்பது சரியா?
Rate this:
06 ஜூன், 2023 - 15:48 Report Abuse
G KARTHIKEYAN நீயே கள்ள தொடர்பில் இருதேண்ணு சொல்ற ... அப்புறம் தியாகி மாதிரி பேசுற ....அய்யோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in