Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய்?

23 செப், 2021 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Vijay-66-:-Vijay-in-Mahesh-babu-story

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65வது படம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் வம்சி இரு வேறு பேட்டிகளில் அந்தப் படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்காக வம்சி சொன்ன கதையில் தான் விஜய் நடிக்க உள்ளாராம். வம்சியும், மகேஷ் பாபுவும் இணைந்து 'மகரிஷி' படத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு வம்சி சொன்ன கதையை மகேஷ் பாபு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அதே கதையைத்தான் விஜய்க்குச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் வம்சி.

தற்போது கதையில் தமிழுக்கேற்றபடி சில மாற்றங்களைச் செய்து, கதாபாத்திரத்திலும் சில மாற்றங்களைச் செய்து மெருகேற்றி வருகிறார்களாம். ஸ்கிரிப்ட் வேலைகள் முழுவதுமாக முடிந்த பின் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இப்படம் மூலம் தெலுங்கிலும் நேரடியாக நடிக்க உள்ளார் விஜய். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராக உள்ளது.

இப்படத்திற்காக விஜய்க்கு 100 கோடி சம்பளம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழில் ரஜினிக்குப் போட்டியாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் தானாம். அவர் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் அஜித்திற்கு என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவிட்ட ஜுனியர் என்டிஆர்பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவிட்ட ... அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா நினைவுகளில் சில்க் ஸ்மிதா! அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
23 செப், 2021 - 16:26 Report Abuse
Easwar Kamal ரஜினி இப்போது வரைக்கும் அவ்வளவு உழைப்பு எல்லா படங்களும் தெரியும். விஜய் தன நடனம் சண்டை என்று தனக்கு ஒரு பனி வைத்து எல்லா மொழிகளிலும் வியாபாரம் வைத்து உள்ளார். அஜித் என்ன செய்கிறார் சும்மா வந்துட்டு போன போடும் படம் ஓடும் என்று நம்புகிறார். அவரது ரசிகர்கள் வேனல் நமபலம் அனல் போடு மக்கள் நம்ப மாட்டார்கள் அதுதான் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் செல்லுபடி ஆகவில்லை. இவர் ஒரு மலையாளி இருந்தும் விஜய் உள்ள மார்க்கெட் கிடையாது. விஜய் மலையாளத்தில் ஒரு டாப் ஸ்டார்.
Rate this:
mohan - chennai,இந்தியா
25 செப், 2021 - 14:17Report Abuse
mohanவிஜய் ரஜினியோடு காம்பரே பன்னாதீங்க விஜய்க்கு தமிழ் மலையாளம் இரெண்டு மொழி படங்களில் மட்டுமே மவுசு அதிகம் ஆனால் ரஜினிக்கு தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஜாப்பனீஸ் என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் அதனால்தான் ஐந்தும் முதல் இடத்தில இருக்காரு அவருக்கு அடுத்த படிதான் விஜய் அஜித் ஏல்லாம் ?...
Rate this:
mohan - chennai,இந்தியா
23 செப், 2021 - 14:17 Report Abuse
mohan இதெல்லாம் ஒரு நியூஸ் விளங்கிடும்
Rate this:
Ram - nagercoil,இந்தியா
23 செப், 2021 - 19:00Report Abuse
Ramநீ ஏன் படிக்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in