Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர், டப்பிங் கலைஞர் காளிதாஸ் காலமானார்

13 ஆக, 2021 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Actor-and-Dubbing-artist-V-Kalidas-no-more

திருச்சியில் புகழ்பெற்ற நாடக நடிகர் தேவர்ஹால் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ். செய்தி வாசிப்பாளர் சோபனா ரவி, நடிகை சொர்ணமால்யா ஆகியோரின் உறவினர். 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட காளிதாஸ் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு டப்பிங் கலைஞராக அறிமுகமானார். 3 ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசி உள்ளார்.

அதன்பிறகு காமெடி மற்றும் வில்லன் நடிகராகி பல படங்களில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சிக்கு வந்த இவர் மாயா மாரீசன் என்ற தொடரில் மாயாவியாக நடித்தார். வடநாட்டில் தயாராகி ஒளிபரப்பான புராண தொடர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார்.

65 வயதான காளிதாஸ் ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மனைவி வசந்தா ஏற்கெனவே இறந்து விட்டார். விஜய் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். பார்கவி சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஐதராபாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் அஜித்ஐதராபாத்தில் துப்பாக்கி சுடும் ... ஆனந்தி கர்ப்பமாக உள்ளாரா? ஆனந்தி கர்ப்பமாக உள்ளாரா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Rangarajan Gopaladesikan - dombivli,இந்தியா
16 ஆக, 2021 - 16:52 Report Abuse
Rangarajan Gopaladesikan அவர் ஒரு நல்ல நடிகர். அவருடைய காமெடி "பிறகு" படத்தில் மிக மிக நன்றாக இருக்கும். அதிலும் அந்த வட்டி கணக்கு வசனங்கள் பிரமாதம் ஆக இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 ஆக, 2021 - 02:47 Report Abuse
meenakshisundaram வடிவேலுவின் காமெடிக்கு பெருமை சேர்த்தவர் .இவருடன் வடிவேல் நடித்த காமெடி காட்சிகள் மறக்கவே முடியாது.மேலும் 'ஆனந்தம் 'சீரியலும் ஒரு எடுத்துக்காட்டு.
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
14 ஆக, 2021 - 06:15 Report Abuse
 N.Purushothaman ஆழ்ந்த இரங்கல்கள் ....இவரின் குரல் நல்ல திடமாக கணீரென இருக்கும் ...அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ....
Rate this:
Chola - bangalore,இந்தியா
13 ஆக, 2021 - 15:12 Report Abuse
Chola Rest in peace sir
Rate this:
13 ஆக, 2021 - 14:51 Report Abuse
ஸாயிப்ரியா கனமான கணீர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். பிரிவு வேதனை.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in