Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கபாலி, காலா'வை கலாய்க்கும் சில ரசிகர்கள்

23 ஜூலை, 2021 - 20:19 IST
எழுத்தின் அளவு:
Fans-trolls-Kabali,-Kaala

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து ஒரே நாளில் ஓரளவிற்குப் பேசப்பட்டால் அதற்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ வெவ்வேறு விஷயங்களைச் சேர்த்து கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் சொல்வார்கள். அப்படி ஒன்றாக பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்து இயக்கிய 'கபாலி, காலா' படங்களைப் பற்றியும் இப்போது வம்புக்கு இழுத்துள்ளார்கள் சில ரசிகர்கள்.

“அட்டகத்தி, மெட்ராஸ்' என இரண்டு படங்களையும் கதாநாயகர்களை நம்பாமல் தனது கதையையும், இயக்கத்தையும் நம்பியதால் அந்த இரண்டு படங்களுக்காகவும் பெரும் வரவேற்பை பெற்றார் ரஞ்சித்.

அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி, காலா' ஆகிய படங்களில் ரஞ்சித் அதிகம் பேசப்படவில்லை. அந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளை வேண்டுமானால் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் ரஞ்சித் பேசப்படுகிறார்.

எனவே, இனி ரஞ்சித் ஹீரோக்கள் பின்னால் போகாமல் தன் படத்திற்காக, கதைக்காக ஹீரோக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் கதை உருவானது எப்படி? ராஜேந்திர பிரசாத்ஆர்ஆர்ஆர் கதை உருவானது எப்படி? ... தென்னிந்திய மொழிகளில் சூர்யாவின் 'ஜெய் பீம்' - ஓடிடி வெளியீடா ? தென்னிந்திய மொழிகளில் சூர்யாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
24 ஜூலை, 2021 - 14:47 Report Abuse
S Ramkumar பா. ரஞ்சித் பேசாமல் ஜாதி (அவரின் ஜாதி) படங்களையே எடுக்கலாம். சர்பட்ட படம் தியேட்டரில் வெளியிட்டு இருந்தால் அந்த படத்தின் கதி தெரிந்து இருக்கும். ஓடிடி காரணமாக என்ன வேண்டுமானாலும் எழுதலாம். சுத்த ஹம்பக் படம்.
Rate this:
mohan - chennai,இந்தியா
24 ஜூலை, 2021 - 13:33 Report Abuse
mohan அப்போ அடுத்த படம் விஜய் அஜித் வச்சி எடுத்தா படம்ஓடுமா இல்ல பேச படும்மா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in