Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்துடன் மரம் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய அருண் விஜய்

20 ஏப், 2021 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Arunvijay-sapling-plant-to-tribute-Vivek

சின்னக்கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் ஒரு இயற்கை ஆர்வலர்.. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர்.. அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு காணிக்கையாகவும் அஞ்சலியாகவும் செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் அருண் விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தனது இறுதி மரியாதையை விவேக்கிற்கு செலுத்தியுள்ளார். தானும், தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் ஆர்ணவ் ஆகிய மூவரும் மரம் நடும் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அருண்விஜய்.. மேலும், “பூமியை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, அடுத்த தலைமுறைக்கு அழகாக கற்றுக்கொடுத்தீர்கள்.. எங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்ததற்கு நன்றி சார்” என கூறியுள்ளார் அருண்விஜய்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தடுமாற்றத்தில் அஜித்தின் வலிமை படக்குழுதடுமாற்றத்தில் அஜித்தின் வலிமை ... தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துப்பாக்கி வில்லன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vjlumar - Tanjavur,இந்தியா
26 ஏப், 2021 - 12:58 Report Abuse
Vjlumar போட்டோக்கு போஸ் குடுக்கறானுங்க . மரத்தை சுவர்கிட்ட கொண்ட நடுவாங்க.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 ஏப், 2021 - 16:35 Report Abuse
J.V. Iyer நல்லது செய்ய விளம்பரம் வேண்டாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in