Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

13 ஏப், 2021 - 19:28 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-stalin-tweet-about-Karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகிபாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன இசையமைத்துள்ள இப்படம் கடந்த 9-ந்தேதி அன்று வெளியாகி வசூலை பெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கொடியன் குளத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்திற்கு சாதி ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளனர்.

இந்நிலையில் கர்ணன் படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்படட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்தல் இன்றி எடுக்கப்படட இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்தேன்.

மேலும், 1995ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம், 1997ல் கழக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக் காட்டினேன். அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுகிறோம் என உறுதியளித்தனர் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன்கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - ... ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

meenakshisundaram - bangalore,இந்தியா
21 ஏப், 2021 - 10:03 Report Abuse
meenakshisundaram கர்ணன்படம் ஒன்றும் சரித்திரத்தை கூறும் வரலாற்று படம் அல்ல.கதைக்கு பஞ்சம் ஆனா காலத்திலே எதையாவது சுட்டு அல்லது ஏதாவது ஒரு நிகழ்வை ,செயதியை வைத்து படம் எடுப்பது இன்று வாடிக்கை ஆகி விட்டது .மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து பாத்திரங்களை ,நீதிகளை வைத்தே மணிரத்னம் போன்ற முதிர்ந்த (?) இயக்குனர்கள் .மற்றும் பழைய கர்நாடாக பாட்டுக்களில் இருந்து ரெஹ்மான் சுட்டு .அதன் வேகத்தினை (நடை )மாற்றி மாடர்ன் இசை யில் தொழில் செய்வது சகஜம் .இந்த மாதிரி நிலையில் நேற்று முளைத்த காளான் உதயநிதி (இவர் இன்னும் திரை உலகிலேயே கால் சரியாக ஊன்றவில்லை )அரசியல் என்னும் கடலில் மிதித்து எடுக்க பார்க்கிறார் .இவர் கற்றறிந்த அறிஞரும் அல்ல.அடுத்தவர் கதையில் தவறு என்று ஒன்றை சுட்டிக்காட்ட .கதையின் கரு ஒன்று ,திரைக்கதை ஒன்று ,தவறு செய்தவர்கள் மனசாட்சி குத்தும் என்பார்கள் .அதை போல இவர் தான் ஒன்று நினைத்துக்கொண்டு இன்னொருவரை குற்றம் என்று கூறுகிறார்.அண்ணாமலை யூனிவர்சிட்டி கொலை .நெல்லையில் மாணவன் கொலை என்று இவரின் தாத்தா காலத்தில் டாக்டர் பட்டம் வழங்கும் போது எத்தனையோ அட்டூழியங்கள் நடந்தேறி உள்ளன ,மாறி செல்வராஜ் போன்றவர்கள் அவற்றையும் கரு வாக வைத்து எத்தனையோ திரை படங்களை வழங்கலாம் .வருஷன்களை குறிப்பிட்டாலேயே எதிர் கருத்துக்களை கூற முடிகிறது .
Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17 ஏப், 2021 - 19:52 Report Abuse
Poongavoor Raghupathy UDAYANIDHI ஒரு சரியான வேகாத அரசியல்வாதி. திமுக அண்ட் ஸ்டாலின் சேர்ந்து எடப்பாடியையும் அதிமுக வையும் திட்டியே அவர்களை வெற்றி பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்கள். திமுக எலெக்ஷனில் தோற்கப்போவது நன்கு தெரிகிறது. எடப்பாடி நூற்றி அறுபது இடங்களை வென்று ஆட்சியில் அமர போவது உறுதி. திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் உதயநிதி எ ரஸா இவர்கள் என்பதில் சந்தேகம் இல்லவே இல்லை. திமுக ராமரை செருப்பால் அடித்திருந்தால் வீரமணி சொல்வது போல டெபாசிட் கிடைக்காமல் வீட்டுக்கு போயிருக்கலாம்.
Rate this:
vijay - coimbatore,இந்தியா
15 ஏப், 2021 - 11:33 Report Abuse
vijay மாஞ்சோலை தோட்ட தொழிலார்களை கொன்றது, 1970 -1980 வரையில் போராடிய 47 விவசாயிகளை போலீஸ் மூலம் சுட்டுக்கொன்றது இதெல்லாம் உன் தாத்தா. அதை எல்லாம் வச்சி படம் எடுக்கலாமா தம்பி? போனோமா பாலடாயில குடிச்சமா என்று இரு போ. ரொம்ப யோக்கியவான் மாதிரி பேசினாய் என்றாய் நீயும் உன் கட்சியம் நாறடிக்கப்படுவீர்கள்
Rate this:
sankar - Nellai,இந்தியா
15 ஏப், 2021 - 09:13 Report Abuse
sankar அதைவிட பெரிய விஷயமான - தாமிரபரணி கொலைகள் - காண்பித்து இருக்கலாம்
Rate this:
14 ஏப், 2021 - 18:44 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அப்படியே முதலமைச்சரை தரக்குறைவாக பேசியத்திற்கு மன்னிப்புகேட்டுக்கொள்.. கழக ஆட்சியில் இல்லாதபோதுதான் இது நடந்தது
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in