Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ?

18 ஜன, 2021 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Master-flop-in-Hindi?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

விஜய் நடித்த படம் ஒன்று ஹிந்தியில் முதல் முறையாக டப்பிங் ஆகி வெளியாவது இதுவே முதல் முறை. மற்ற மொழிகளில் ஜனவரி 13ம் தேதி வெளியான படம் ஹிந்தியில் ஜனவரி 14ம் தேதி வெளியானது.

வட இந்தியாவில் ஹிந்தியில் சுமார் 500 தியேட்டர்களில் 'மாஸ்டர்' வெளியானதாகச் சொன்னார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் கூட வசூலைப் பெற முடியாமல் படம் தடுமாறி உள்ளது. மொத்தமாக 2 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாகத்தான் வசூலித்துள்ளது என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் முதல் நாளில் வெளியான 'மாஸ்டர்' தமிழ், தெலுங்குக்கு கிடைத்த வரவேற்பை விட ஹிந்திக்கு குறைவாகவே கிடைத்துள்ளதாம். சரியான விளம்பரம், பிரமோஷன் செய்யாமல் படத்தை வெளியிட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

இருப்பினும் தெலுங்கு மாநிலங்களில் இப்படம் 'லாபக் கணக்கை' ஆரம்பித்துவிட்டது என்பது கொஞ்சம் ஆறுதல். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விஜய் படங்களுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கும். அது தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவுக்கும் பரவியுள்ளது விஜய்க்கு அடுத்த படத்திற்கான சம்பளத்தை ஏற்க பேருதவி புரியும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21'கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19 ஜன, 2021 - 15:20 Report Abuse
திரு.திருராம் பிரமோசன் என்பது கழுதையை புலியாக காட்ட முயல்வது, அது ஒரு கழுதைப்புலி அளவுக்காவது இருந்தால் மக்கள் மன்றத்தில் சிறிது தப்பிவிடும், ஆனால் இது எப்படி தப்பும், ரசிகர்கள் வேண்டுமானால் கரடிவிட்டுத் திரியலாம், ஆனால் தயாரிப்பாளருக்குத் தெரியும் பின்னால் உதைவிழுவது,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in