‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அட்லீ இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க 2017ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் 'மெர்சல்'.
ஏஆர் ரகுமான் இசையில், விவேக் எழுதிய அப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதிலும் குறிப்பாக 'ஆளப் போறான் தமிழன்' பாடல் இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் என அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
'மெர்சல்' படப் பாடல்களை இப்போதும் ரசிகர்கள் யுடியூபில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அந்தப் பாடல்களின் பார்வைகளே சாட்சி. 'மெர்சல்' படத்தின் மொத்தப் பாடல்களும் 30 கோடி பார்வைகளைத் தற்போது கடந்திருக்கின்றன.
'ஆளப் போறான் தமிழன்' பாடலின் வீடியோ 8 கோடியே 81 லட்சத்தையும், லிரிக் வீடியோ, 4 கோடியே 36 லட்சத்தையும் கடந்துள்ளன. மற்ற பாடல்களில், வீடியோ மற்றும் லிரிக் இரண்டையும் சேர்த்து 'மாச்சோ' பாடல் 6 கோடி, 'மெர்சல் அரசன்' பாடல் 4 கோடியே 90 லட்சம், 'நீதானே' பாடல் 5 கோடியே 60 லட்சம் பார்வைகளையும் கடந்து மொத்தமாக 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளன. வேறு எந்தப் படத்தின் பாடல்களும் இந்த அளவிற்கு யு டியுபில் வரவேற்பைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.