ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். அவர், தொழில் மீது மிகுந்த பக்தியோடு இருப்பதாகக் கூறினாலும், சினிமாவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதற்காக, முதல் கட்டமாக ஜிம் துவங்கி இருக்கும் அவர், அடுத்த கட்டமாக ஓட்டல் துவங்கும் மும்முரத்தில் இருக்கிறார். சினிமா தொழிலில் தனக்கு சுணக்கம் ஏற்பட்டால், வேறு தொழில்கள் தன்னைக் காக்கும் என்பதாலேயே அடுத்தடுத்த தொழில்கள் மீது நாட்டம் கொள்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங்.
மிகுந்த உணவுப் பிரியரான ரகுல் ப்ரீத்தி சிங், எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் சிறப்பான உணவை வாங்கி சாப்பிட்டு டேஸ்ட் செய்வார்.
இப்படி ஒவ்வொரு ஊருக்கும் இருக்கும் சிறப்பான உணவு வகைகளை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும்படியான ஒரு ஓட்டலைத் துவங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தன்னுடைய ஓட்டல் துவங்கும் முயற்சியில் ரகுல் ப்ரீத்தி சிங் தீவிரமாக இருக்கிறார். 'இப்படிப்பட்ட தன்னுடைய ஆசை விரைவில் நிறைவேறும்' என்று ரகுல் ப்ரீத்தி சிங் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.