ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வட சென்னை' படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் ஒரு படத்தில் இணைகினறனர். எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' தயாரிக்கும் இந்த படத்துக்கு 'அசுரன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ப.பாண்டி படத்தை அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கினார் தனுஷ். அந்தப்படம் தற்போது பைனான்ஸ் பிரச்சனையில் முடங்கியுள்ளது. எனவே வெற்றிமாறன் படத்தை உடனே தொடங்கும்படி சொல்லி இருக்கிறார் தனுஷ்.
அதுமட்டுமல்ல குறுகியகாலத்தில் 50 நாட்களில் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் சொல்லிவிட்டாராம். எனவே, சீக்கிரம் பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் ஜி.வி.பிரகாஷ் குமாரை கமிட் பண்ண விரும்பினாராம் வெற்றிமாறன்.
அதேநேரம் தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் ஏற்கனவே பிரச்சனை என்பதால் வெற்றிமாறன் தயங்கினாராம். நிலைமையை புரிந்து கொண்ட தனுஷ் ஜி.வி.பிரகாஷ் குமாரை சந்தித்து கை கொடுக்க தயாராகி இருக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு வெற்றிமாறன் கேட்டு கொண்டதற்கு இணங்க தற்போது இறங்கி வந்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வட சென்னை' படம் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.