இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த சர்கார் படம் வெளியாகி, தற்போது 50ஆவது நாளை தொட்டுள்ளது. முருகதாஸ் - விஜய் கூட்டணியில் மூன்றாவதாக உருவான இந்தப்படம் நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. குறிப்பாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு கதை பிரச்னை தொடர்பாகவும் ரிலீஸான பின்பு அரசாங்க ரீதியாகவும் என இருவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்ட படம் என்றால் அது சர்கார்' படமாகத் தான் இருக்கும்.
அதுமட்டுமல்ல இந்தப்படம் வெளியான பின்பு, சில நாட்கள் கழித்து ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியான '2.0' அலையிலும் தாக்குப்பிடித்து, தற்போது ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது. முதல் நாள் வசூல் சாதனை, ரிலீஸுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் வியாபாரம் என சில சாதனைகளையும் சர்கார் தன்வசம் இறுக்கிப்பிடித்து வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.