ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமன்னா நடிப்பில் தட் இஸ் மகாலட்சுமி, சைரா நரசிம்ம ரெட்டி, கண்ணே கலைமானே, தேவி 2 ஆகிய படங்களில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவர் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ள கேஜிஎப் என்ற படம் நேற்று திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாகுபலியைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்மரெட்டி படத்திலும், ஒரு புரட்சிகரமான பெண்ணாக நடித்துள்ளார் தமன்னா.
தமன்னாவின் 30வது பிறந்த நாள் நேற்று(டிச.,21). இதையொட்டி, சைராவில் தமன்னா நடித்துள்ள லட்சுமி கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதேப்போன்று குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மகாலட்சுமி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்தநாளில் இரண்டு படங்களின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்டிருப்பது தமன்னாவிற்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.