ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகர் யோகி பாபு தான். ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபுவுக்கு, சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டைமிங் டயலாக் மூலம் ரசிகர்களை தனது நடிப்பால் அவர் ஈர்த்து வரும் யோகிபாபு சர்கார் படத்தில் விஜய் உடனும், விஸ்வாசம் படத்தில் அஜித் குமார் உடனும், நடித்துள்ளார்.
அவருடன் பேசும்போது “விஜய், அஜித் இருவரில் யார் பெஸ்ட் என்று கேட்டால், “ரெண்டு பேருமே எனக்கு ஒன்று தான். இருவரையும் பிரித்துப் பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.
விஜய் கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். விஸ்வாசம் படத்துல அஜித் கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட 'அண்ணே... பேசட்டுமா?'ன்னு தயங்கிக் கேட்டேன்.
அதுக்கு, 'என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை, பேசுங்க'ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு” என்று உஷாராக பதில் சொல்கிறார்.
பிழைக்கத் தெரிந்தவர் தான் யோகிபாபு.