பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ரஜினிகாந்த்தின் நீண்டகால நண்பரும், அவரின் மேக்-அப் மேனுமான முத்தப்பா(75) காலமானார். அவரது, உடலுக்கு ரஜினி நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.
தென்னிந்திய சினிமாவின் மூத்த மேக்கப் மேன் முத்தப்பா. எம்ஜிஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பலருக்கு மேக்கப் மேனாக பணியாற்றினார். ஒருகட்டத்தில், ரஜினிக்கு மட்டுமே ஆஸ்தான மேக்கப் மேனாக மாறினார். அவரின் படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
முத்தப்பாவின் மரண செய்தி கேட்டு உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் ரஜினி. அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
ரஜினி நான் பெற்றிராத மகன் என பல முறை கூறியிருக்கிறார் முத்தப்பா. இவரைப் பற்றி ஒப்பனக்காரன் என்ற புத்தகமே வெளியாகி உள்ளது.