ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில வருடங்களுக்கு முன் முன்னணி ஹீரோவாக விளங்கிய விமல் ஒரு கட்டத்தில் மார்கெட்டை இழந்தார். அதன் பிறகு அவ்வப்போது நடித்து வந்தவர், தற்போது அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். விமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தாலும், கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது.
அப்படத்தில் வெற்றி விமலுக்கு மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சதா நடிப்பில் வெளியான 'டார்ச் லைட்' படத்தை இயக்கிய அப்துல் மஜித் இயக்கும் 'தி புரோக்கர்' படத்தில் நடிக்கிறார் விமல். 'நம்பி வாங்க சந்தசோஷமாக போங்க' என்ற அடைமொழியுடன் உருவாகும் இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, டயானா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
தி புரோக்கர் படத்தில் வீடு, நிலம், விற்க, வாங்க உதவும் தரகர் (புரோக்கர்) கேரக்டரில் நடிக்கிறார் விமல். இந்த படத்தை இயக்கும் அப்துல் மஜித் விஜய் நடித்த 'தமிழன்' மற்றும் 'துணிச்சல்', 'பைசா' ஆகிய படங்களை இயக்கியவர்.