ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த 2.0 படம் வெளிவந்து இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நாளை(டிச.,12) வருவதை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று காலை சென்னையில் உள்ள காசி டாக்கீசில் மாற்றுத்திறனாளிகள் ரசிப்பதற்காக 2.0 படத்தின் சிறப்புக் காட்சியை நடத்தினார்கள். அவர்கள் படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்தார்கள். படக் காட்சியோடு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
தியேட்டருக்குள் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று படம் பார்ப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தங்களுக்காக சிறப்புக் காட்சியைக் காட்டியதற்கு மாற்றுத் திறனாளிகள் ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.