'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
டெல்டா பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிந்தி நடிகர் அமீர்கான் கஜா புயல் பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்து ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை அறிந்து வருத்தமடைந்தேன். அங்கு பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவ ஒன்று படுவோம் . நம்மால் முடிந்த உதவிகளை அளிக்க முயற்சி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைப்பார்த்த கமல்ஹாசன், மிக்க நன்றி அமீர் ஜி, உங்களைப் போன்றவர்களால் தான் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணம் வருகிறது என்று டுவீட் போட்டுள்ளார்.