ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வரும் படம் அக்னிதேவ். ஜான் பால்ராஜ், சாம் சூர்யா இயக்குகிறார்கள். சியாண்டோ ஸ்டூடியோ மற்றம் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் டெரர் வில்லியாக சகுந்தலாதேவி என்ற கதாபாத்திரத்தில் அமைச்சராக நடிக்கிறார் மதுபாலா.
நீண்ட இடைவௌிக்கு பிறகு மதுபாலா தமிழில் நடிக்கும் படம் இது. ரம்யா நம்பீசன், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அக்னிதேவ் படத்தின் முதல் டிரைலர் வௌியாகி உள்ளது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இந்த டிரைலரில், மதுபாலா, நிஜமாகவே, டெரர் வில்லியாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்திராத ஒரு வித்தியாசமான படமாக அக்னிதேவ் அவருக்கு அமையும் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
https://t.co/M9rtUWJna9 #Agnidev trailer
— Ramya Nambessan (@nambessan_ramya) November 25, 2018