தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ராட்சசன் படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.. குறிப்பாக அதில் சைகோ வில்லனாக முகத்தை காட்டாமல் நடித்திருந்த நடித்திருந்த சரவணன் கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது.
அதேபோல இன்னொரு பக்கம் மெயின் வில்லனாக இல்லாவிட்டாலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் காமக்கொடூர ஆசிரியராக நடித்திருந்த வினோத் சாகர் என்பவரையும் இந்தப்படம் அடையாளம் காட்டியுள்ளது.
இந்தப்படத்தின் இயக்குனர் ராம்குமாருடன் ஏழு வருடமாக நட்பில் இருக்கும் வினோத் சாகர், இந்தக்கதையில் உள்ள அந்த ஆசிரியர் வேடத்தை தனக்கு தரும்படி நீண்ட நாட்களாகவே கேட்டு வந்துள்ளார். ஆனால் ராம்குமாரோ, இவரை நம்பாமல், அதற்காக வேறு நடிகரை பேசி வைத்திருந்தாராம். ஆனால் அந்த நடிகர் இந்த கேரக்டரில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுவிடும் என கூறி, கடைசி நேரத்தில் ஒதுங்கிக்கொள்ள, அந்த வாய்ப்பு வினோத் சாகருக்கு வந்ததாம்.
ராம்குமார் மட்டுமல்ல, அவரது உதவி இயக்குனர்களுக்கும் கூட, தாடி வைத்துக்கொண்டு வலம்வந்த வினோத் சாகர் எப்படி ஆசிரியராக பொருந்துவார் என்கிற சந்தேகத்தில் தான் இருந்தனராம். ஆனால் மேக்கப் டெஸ்ட் மற்றும் நடிப்பு டெஸ்ட் என இரண்டிலும் அவர்களை ஆச்சரியமடைய வைத்து இந்த வாய்ப்பை பெற்றாராம் வினோத் சாகர்.