பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஆப் தமிழா ஆதி, இசை அமைத்து நடிக்கும் படத்திற்கு நட்பே துணை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டையும், நட்பையும் மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் புதுமுகம் அனகா ஹீரோயின். மான்கராத்தே, ரெமோ படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய டி.பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.
கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன், ஷாரா, கவுசல்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
ஒரு விளையாட்டின் வெற்றி என்பது விளையாடும் வீரர்களின் நட்பில் தான் இருக்கிறது. இதை மையப்படுத்தி ஹாக்கி விளையாட்டையும், நட்பையும் கலந்து சொல்லும் படம். காமெடி, ஆக்சன், நட்பு மூன்றையும் சமவிகித்தில் கலந்து நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது.
நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. என்றார்.