'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் துப்பாக்கி முனை இதனை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஹன்சிகா ஹீரோயின். இதற்கு அடுத்த படம் அசுரகுரு. ஜே.எஸ்.பி ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்கிறார். மோகன்ராஜா உதவியாளர் ராஜ்தீப் இயக்குகிறார். இவர் திரைப்படக்கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றவர். இவர் ஏராளமான குறும்படங்களை இயக்கி உள்ளார். அவைகள் பல விருதுகளை பெற்றுள்ளன. அவர் இயக்கும் முதல் படம் இது.
இதில் விக்ரம் பிரபு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ், சுப்புராஜ், குமரவேல் உள்பட பலர் நடிக்கிறார்கள். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. நேற்று படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.