தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த மதுரவீரன் படத்தில் அறிமுகமானவர் மீனாட்சி, கேரள வரவு. அந்தப்படத்தில் மதுரை பெண்ணாக பாவாடை தாவணியில் நடித்தார். படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கினார். மதுரவீரன் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் மீனாட்சிக்கும் அடுத்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அப்படி வந்த ஒரு சில வாய்ப்புகளும் சிறிய பட்ஜெட் படங்களில் கிராமத்து பெண் வேடம் தான். இதனால் பாதியில் விட்டு விட்டு வந்த பிளஸ் ஒன் படிப்பை படிக்கப் போய்விட்டார்.
தற்போது பிளஸ் 2 படிப்பையும் முடித்து விட்ட மீனாட்சி, பட்டப் படிப்பை தபாலில் படிக்க முடிவு செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். இதனால் தனியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார். மலையாளத்தில் 2 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் வாய்ப்பு தேடுகிறார். மார்டன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.