மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வருகிற 6ம் தேதி தீபாவளி தினத்தன்று விஜய் நடித்த சர்கார் படம் வெளிவருகிறது. அதனுடன் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன், பில்லா பாண்டி மற்றும் ஒன்றிரண்டு சிறிய படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில மாற்றங்கள் நடக்கும் என்ற தெரிகிறது. திமிரு புடிச்சவன் தீபாவளி ரேசில் இருந்து விலகி இருக்கிறது.
இந்த நிலையில் அட்டகத்தி தினேஷ், அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் தீபாவளி ரேசுக்கு வந்திருக்கிறது. பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ராஜபுஷ்பா பிக்சர்ஸ் சார்பில் காந்தி மணிவாசகம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அவரது மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார்.
ஆனந்தராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்தின், மூனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அத்தைக்கும் மருமகனுக்குமான கதை. இதில் அத்தையாக தேவயானி நடித்துள்ளார்.