டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நகுல் நடித்த படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையாததினால் அவரது படங்களை பிசினஸ் செய்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் முஞ்சால் இணைந்து நடித்திருக்கும் படம் 'செய்'.
பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை விஜய் உலகநாத் கவனித்துள்ளார். புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் செய் படத்தை நவம்பர் 16-ஆம் தேதி சொந்தமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதே தேதியில் காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, உட்பட வேறு சில படங்களும் வெளியாகின்றன. இதற்கிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படமும் வெளியாகிறது. இதனால் செய் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எப்படியும் நவம்பர் 16 அன்று தங்கள் படத்தை வெளியிட்டே தீருவது என்ற எண்ணத்தில் வேலைகளை துவக்கியுள்ளனர்.