ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் பில்லா பாண்டி, தாரை தப்பட்டையில் தொடங்கி இதுவரை வில்லனாக நடித்து வந்த சுரேஷ் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். அவருக்கு ஜோடியாக இந்துஜா, சாந்தினி நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தயாரிப்பாளர் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, சரவணசக்தி, மாரிமுத்து, சங்கிலி முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இளையவன் இசை அமைக்கிறார், ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்சேதுபதி இயக்கி உள்ளார்.
மதுரையை பின்னணியாக கொண்ட கதை. பில்லா பாண்டி தீவிர அஜீத் ரசிகர். ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு அவர் ஊருக்கு நல்லது செய்ய போராடுவதும், அதனால் வரும் பிரச்சினைகளை சந்திப்பதும்தான் கதை. காதலியாக இந்துஜா, முறைப் பெண்ணாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை ஜே.கே.பிலிம்ஸ் வாங்கி உள்ளது. படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் அசோக்குமாரின் மகன் ஹரிஹந்த் வாங்கி உள்ளார். அதனை ஜனவரியில் ரீமேக் செய்ய இருக்கிறார். பில்லா பாண்டி தீபாவளிக்கு வெளிவருகிறது.